இரா. இராமநாதன்
இந்திய அரசியல்வாதி
இரா. இராமநாதன் (R. Ramanathan) என்பவர் (பிறப்பு 1948 - இறப்பு 3 டிசம்பர் 2019) திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரா. இராமநாதன் | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை | |
பதவியில் 1985–1991 | |
முன்னையவர் | எம். ஏ. சண்முகம் |
பின்னவர் | டி. தியாகராஜன் |
தொகுதி | குருவிநத்தம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1948 |
இறப்பு | 3 திசம்பர் 2019 (வயது 71) |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
சுயசரிதை
தொகுஇராமநாதன் 1985இல் குருவிநத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் மீண்டும் 1990இல் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ரா. ராதாகிருஷ்ணனின் தந்தை ஆவார். இராதாகிருஷ்ணன் புதுச்சேரி சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[3]
இராமநாதன் தனது 71 வயதில் 3 டிசம்பர் 2019 அன்று மாரடைப்பால் இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pondicherry Assembly Election Results in 1985". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Pondicherry Assembly Election Results in 1990". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
- ↑ "Former DMK MLA dead". The Hindu. 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 December 2019.
- ↑ "Former MLA passes away". United News of India. 3 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 December 2019.