குருவிநத்தம், பாகூர்
குருவிநத்தம் (Kuruvinatham) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் கொம்யூனில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். விழுப்புரத்திலிருந்து திருபுவனை வழியாகக் கடலூருக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளுக்கும் குருவிநத்தம் கிராமமே நுழைவாயிலாக திகழ்கிறது. புதுச்சேரி மாவட்டத்தின் அயலக நகரமான பாகூருக்கு தென்மேற்கு முனையில் இக்கிராமம் அமைந்துள்ளது.
குருவிநத்தம் Kuruvinatham | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
தாலுகா | பாகூர் |
கொம்யூன் | பாகூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எண் --> | 607 402 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
எல்லைகள்
தொகுமேற்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்பணம்பாக்கம் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கரைமேடு கிராமம், கிழக்கில் பாகூர் மற்றும் பரிக்கல்பட்டு கிராமங்கள், தெற்கில் சோரியாங்குப்பம் ஆகியனவை குருவிநத்தம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து
தொகுகுருவிநத்தம் சாலை வழியாக பாகூருடன் இணைக்கப்பட்டுள்ளது. கடலூர் – பள்ளிநெல்லியனூர் பிரதான மாவட்டச்சாலை குருவிநத்தம் வழியாகச் செல்கிறது. மேலும் புதுச்சேரி – சோரியாங்குப்பம் பேருந்துச்சாலை குருவிந்ததம் கிராமத்துடன் இணைக்கிறது. பாகூர் வழியாகச் செல்லும் கடலூர் – விழுப்புரம் பேருந்துகள் குருவிநத்தத்தை இணைக்கின்றன.
அரசியல்
தொகுபுதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், பாகூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் குருவிநத்தம் கிராமம் இருக்கிறது. தொடக்கக் காலத்தில் குருவிநத்தம் கிராமம் தனி சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதிச் சீரமைப்பில் குருவிநத்தம் சட்டப்பேரவைத் தொகுதி சிதைக்கப்பட்டது.
படக்காட்சியகம்
தொகு-
குருவிநத்தம் கிராமப் பஞ்சாயத்தின் வரைபடம்
-
குருவிநத்தம், பாகூர் ஒன்றியம்
-
புதுக்குப்பம் (பாகூர்)-சோரியாங்குப்பம் சாலை, பாகூர்- குருவிநத்தம் சாலையைச் சந்திக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.