சோரியாங்குப்பம்

சோரியாங்குப்பம் (Soriyankuppam), என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான, புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1] புதுச்சேரியில் இருந்து சாவடி வழியாகப் பண்ருட்டி செல்லும் பாதையில் மாற்றுப்பாதையாக சோரியாங்குப்பம் சாலை பயன்படுகிறது. புதுச்சேரி மாவட்டத்தின், அயலகச் சிற்றூரான பாகூருக்கு தென்மேற்கு முனையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

சோரியாங்குப்பம்
Soriyankuppam
கிராமம்
சோரியாங்குப்பம் கிராமப் பஞ்சாயத்து வரைபடம்
சோரியாங்குப்பம் கிராமப் பஞ்சாயத்து வரைபடம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல் பூர்வம்தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண் -->
607 402
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

பெயர்க்காரணம்

தொகு

"ஜோதிலிங்கக் குப்பம் "என்பதே இவ்வூரின் தொடக்கக்காலப் பெயராகும். இங்குள்ள ஆலயத்தின் சிவலிங்கத்தின் பெயரால் இவ்வூர் இப்பெயர்ப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பின்னாட்களில் இப்பெயர் திரிந்தும், மருவியும் சோரியங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது.

எல்லைகள்

தொகு

மேற்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டைராவிலாகம் கிராமம், வடக்கில் குருவிநத்தம் கிராமம், கிழக்கில் பரிக்கல்பட்டு கிராமம் மற்றும் தெற்கில் தென்பெண்ணை ஆறு ஆகியன சோரியாங்குப்பம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து

தொகு

சோரியாங்குப்பம் சாலை வழியாக பாகூருடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வொன்றியத்தின் தலைமை இடமான கடலூர் – பள்ளிநெல்லியனூர் பிரதான மாவட்டச்சாலை சோரியாங்குப்பம் வழியாகச் செல்கிறது. மேலும் புதுச்சேரி – சோரியாங்குப்பம் பேருந்துச்சாலை சோரியாங்குப்பத்தை நேரடியாக புதுச்சேரியுடன் இணைக்கிறது.

அரசியல்

தொகு

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், பாகூர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் சோரியாங்குப்பம் கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரியாங்குப்பம்&oldid=3699537" இலிருந்து மீள்விக்கப்பட்டது