பரிக்கல்பட்டு, பாகூர்

பரிக்கல்பட்டு (Parikkalpattu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரி மாவட்டத்தின் அயலகச் சிற்றூரான பாகூருக்கு தென்மேற்கு எல்லையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

பரிக்கல்பட்டு
Parikkalpattu
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண் -->
607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

எல்லைகள்

தொகு

மேற்கில் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிராமங்கள் , வடக்கில் பாகூர், கிழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கங்கணாகுப்பம் கிராமம், தெற்கில் பெண்ணையாறு ஆகியன பரிக்கல்பட்டு கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து

தொகு

பரிக்கல்பட்டு கிராமம் இதனுடைய ஒன்றியத்தலைமை இடமான பாகூருடன் பாகூர்- பரிக்கல்பட்டு சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் பரிக்கல்பட்டு கிராமத்திற்கு நகரப் பேருந்துகளை இயக்குகிறது. ஆனால் அவை அடிக்கடி இல்லாமல் குறைவாகவே இயக்கப்படுகின்றன.

கிராமங்கள்

தொகு

பரிக்கல்பட்டு கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • மேல் பரிக்கல்பட்டு
  • கீழ் பரிக்கல்பட்டு
  • பெரிய அரசாட்சிக்குப்பம்
  • சின்ன அரசாட்சிக்குப்பம்
  • குமந்தன்மேடு

அரசியல்

தொகு

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ,ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் பரிக்கல்பட்டு கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-26.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிக்கல்பட்டு,_பாகூர்&oldid=3562005" இலிருந்து மீள்விக்கப்பட்டது