இரா. கணேசு (R. Ganesh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஊட்டியினைச் சார்ந்த இவர் பள்ளிக்கல்வியினை குன்னூர் தூய அந்தோனியார் மேனிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியில் இளங்கலை கல்வியினை உதகமண்டலம் அரசுக் கல்லூரியிலும், முதுகலை கல்வியினை சென்னை, சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சட்டப் படிப்பில் இளநிலை பட்டப்படிப்பினை கருநாடகாவில் உள்ள நாக கவுடா சட்டப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சார்ந்த இவர் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இரா. கணேசு
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
தொகுதிஉதகமண்டலம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
பதவியில்
16 மே 2016 – 15 மே 2021
முன்னையவர்புத்திசந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

போட்டியிட்டத் தேர்தல்கள் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) சான்று
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உதகமண்டலம் இதேகா வெற்றி 46.90 எம்.போஜராஜன் பா.ஜ.க 43.07 [1]
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உதகமண்டலம் இதேகா வெற்றி 48.34 வினோத் அ.தி.மு.க 40.90 [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "Udhagamandalam Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  3. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கணேசு&oldid=3450515" இலிருந்து மீள்விக்கப்பட்டது