இரா பட்டேரா

இரா பட்டேரா (Ra Patera) வியாழன் கோளின் துணைக்கோளான ஐஓவில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும். இந்த எரிமலை செயல்திறன் மிக்க எரிமலையாக உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. புவியியல், நிலப்பரப்பு மற்றும் எரிமலை வெடிப்புகளின் மூலத்தை தீர்மானிக்க 1979 ஆம் ஆண்டு வாயேசர் விண்கலம் அனுப்பிய படங்கள் வழியாக முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டது. முதன்முதலில் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டபோது இந்த மலை சுமார் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு உயர்ந்து எரிந்தது. குறைந்த பாகுத்தன்மை அல்லது அதிக வெடிப்பு விகிதங்கள் கொண்ட ஏராளமான எரி கற்குழம்புகள் காணப்பட்டன.[1] இரா பட்டேரா எரிமலை நீர்ம கந்தகத்தை வெளியிடும் ஓர் எரிமலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]

இரா பட்டேரா எரிமலையின் எரி கற்குழம்பு வாயேசர் எடுத்த புகைப்படம். (1979)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Geology and Topography of Ra Patera, Io, in the Voyager Era: Prelude to Eruption" (PDF). September 15, 1997. பார்க்கப்பட்ட நாள் June 13, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_பட்டேரா&oldid=3074788" இலிருந்து மீள்விக்கப்பட்டது