இரிங்கோல் காவு
இரிங்கோல் காவு இந்தியாவில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துநாடு வட்டத்தில் பெரும்பாவூரில் இருந்து 2.5 தொலைவில் அமைந்துள்ள துர்க்கை கோயிலாகும். இது ஒரு வனக் கோயிலாகும். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற, கேரளாவில் உள்ள 108 துர்க்கை கோயில்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமைவிடம்
தொகுஇக்கோயில் கொச்சியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், பெரும்பாவூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், கொத்தமங்கலத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பட்டல்' என்ற கிராமத்தில் அமைந்துள்ளது [1]
புராணம்
தொகுதேவகி வசுதேவர் ஆகியோரின் எட்டாவது மகனானன் கிருஷ்ணன் விரைவில் பிறக்கவிருக்கிறான் என்பதை அறிந்த கம்சன் அவர்களின் அனைத்து மகன்களையும் கொல்ல முடிவெடுத்தான். [2]வசுதேவர் எட்டாவது குழந்தையை எப்படியாவது ஆபத்திலிருந்து காப்பாற்ற திட்டமிட்டார். குழந்தை கிருஷ்ணனை அவர்கள், அவன் பிறந்த உடனேயே பிருந்தாவனத்திற்கு இடம் மாற்றம் செய்து அழைத்துச்சென்றனர். அதற்கு முன்பாக யோகநித்ரா அல்லது மாயையின் அவதாரமான பெண் குழந்தையை அந்தத் தொட்டிலில் இட்டனர். அக்குழந்தை எட்டாவது மகன் அல்ல என்று தெரிந்தும் கம்சம் அவர்களைக் கொல்ல முடிவெடுத்தான். அவன் குழந்தையை வேகமாக தலைக்கு மேல் தூக்கியபோது அக்குழந்தை அதிகமான சக்தியைப்பெற்று, அந்தரத்தல் இர்ரினோல் நிலையில் இருந்தது. பின்னர் இப்பகுதி இரிங்கோல் எனப் பெயர் மாற்றம் பெற்றது. மரங்கள், தாவரங்களின் வடிவங்களில் உள்ள சக்தியை இறைவனும் இறைவியரும் சூழ்ந்ததாக நம்பப்படுகிறது.
நிர்வாகம்
தொகுஇரிங்கோல் காவு 28 குடும்பங்களுக்கு சொந்தமானதாகும். அவர்களால் அது நிர்வகிக்கப்பட்டது. இருந்தபோதிலும் 28 குடும்பங்களில் இருந்து 25 குடும்பங்கள் வெளியேறி, இரிங்கோலின் மூன்று குடும்பங்கள் (நாகஞ்சேரி, பட்டச்சேரி மற்றும் ஓரோழியம்) மட்டுமே காவு மற்றும் சுற்றியுள்ள காடுகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கையகப்படுத்தும் வரை அவ்விடத்தில் உரிமையாளர்களாக இருந்தனர்.
படத்தொகுப்பு
தொகுஇரிங்கோல் காவு
தொகுநாகஞ்சேரி மனை
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "番茄社区app,番茄社区下载,番茄社区app官网下载". Archived from the original on 2010-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.
- ↑ Iringole Kavu