பெரும்பாவூர்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளத்திற்கு அருகிலுள்ள ஒரு வசிப்பிடப் பகுதி

பெரும்பாவூர் (Perumbavoor) நகராட்சி [2] இந்தியாவின் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இவ்வூர் எர்ணாகுளத்தில் இருந்து 30 கிலோமீட்டர் வடகிழக்கில், பூர்ணா நதி எனப்படும் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. பெருநகர கொச்சினின் வடகிழக்கு முனையில் உள்ள பெரும்பாவூர் நகரமானது குன்னத்துநாடு தாலுக்காவின் தலைமை இடமும் ஆகும். இந்நகரம் மரத் தொழிற்சாலைகளுக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கும் மாநிலமெங்கும் புகழ் பெற்றுள்ளது. அங்கமாலி நகராட்சிக்கும் மூவாற்றுப்புழை நகரத்திற்கும் இடையில் பிரதானமான மைய்ய சாலையில் பெரும்பாவூர் நகரம் இடம்பெற்றுள்ளது. இச்சாலை கேரளாவின் பழைய பகுதியான திருவிதாங்கூர் வழியாக திருவனந்தபுரத்தை அங்கமாலியுடன் இணைக்கிறது.

பெரும்பாவூர்
Perumbavoor
நகராட்சி[1]
மேலிருந்து கடிகார சுழல் திசையில்: பெத்தேல் சுலோகோ பேராலயம்; கேரள மாநில மின்சார வாரியம்; சும்மா பள்ளிவாசல்; பெரும்பாவூர் கோவில்; பசனை மடம்; குன்னத்துநாடு தாலுக்கா அலுவலகம்
பெரும்பாவூர் Perumbavoor is located in கேரளம்
பெரும்பாவூர் Perumbavoor
பெரும்பாவூர்
Perumbavoor
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
பெரும்பாவூர் Perumbavoor is located in இந்தியா
பெரும்பாவூர் Perumbavoor
பெரும்பாவூர்
Perumbavoor
பெரும்பாவூர்
Perumbavoor (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°06′53″N 76°28′40″E / 10.11472°N 76.47778°E / 10.11472; 76.47778
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
அரசு
 • வகைநகராட்சி
 • நகராட்சி தலைவர்பிச்சு இயான் இயாக்கப்பு
 • நகராட்சி துணைத் தலைவர்Shiba Baby
பரப்பளவு
 • மொத்தம்13.61 km2 (5.25 sq mi)
ஏற்றம்
33 m (108 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,110
 • அடர்த்தி2,100/km2 (5,300/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு0484
வாகனப் பதிவுகே.எல்-40
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகாமை நகரம்கொச்சி
காலநிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
சராசரி கோடை வெப்பம்35 °C (95 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை20 °C (68 °F)
இணையதளம்www.perumbavoormunicipality.in/Perumbavoor

மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் பெரும்பாவூரில் குடியேறியவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் ஒட்டுப் பலகை அல்லது பிற தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். தமிழர்கள், அசாமியர்கள் மற்றும் நேபாளியர்களுக்கு சொந்தமாக இந்நகரில் சிறப்பு காலனிகள் உள்ளன.

மாநில அரசும் பெருநகர கொச்சின் மேம்பாட்டு ஆணையமும் அங்கமாலி, பெரும்பாவுர் பிரவோம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கோலெஞ்சேரி பகுதிகளையும், திருச்சூரிலுள்ள சிறிய நகரமான மாலா மற்றும் கொடுங்கல்லூர் பகுதிகளையும், கோட்டயத்தில் தலையோலபரம்பு மற்றும் வைக்கம் பகுதிகளையும், ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு நகரமான சேர்த்தலை வட்டத்தையும் கொச்சி பெருநகர எல்லைக்குள் கொண்டுவர திட்டமிட்டனர். புதிதாக உருவாக்கப்பட்ட பெருநகரம், கொச்சி பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் என்ற புதிய அதிகாரத்தின் பொறுப்பில் வைக்கப்படும் என்றும் திட்டமிட்டனர்.

வரலாறு

தொகு

பெரும்பாவூர் நகராட்சி 1936 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திருவிதாங்கூரின் திவானாக இருந்த சர் சி.பி.இராமசாமி ஐயர் அனுமதித்த 4 பஞ்சாயத்துகளில் இதுவும் ஒன்று ஆகும். பராவூர், நெடுமங்காடு மற்றும் பூதபாண்டி என்பவை மற்ற மூன்று பஞ்சாயத்துகளாகும்[3]. எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முசுலீம் நகரமான கண்டந்தரா நகரம் பெரும்பாவூருக்கு மிக அருகில் உள்ளது. கண்டந்தராவின் வரலாறு இதற்கு முன்னர் பல செய்தித்தாள்களாலும் விவாதிக்கப்பட்டது. தென் வல்லம் பள்ளிவாசல் எர்ணாகுளம் மாவட்டத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான முதலாவது மசூதியாகும். பெரும்பாவூர் தொகுதி இந்தியாவில் யாக்கோபிய கிறித்துவ மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். பெரும்பாவூர் என்ற பெயர் பெரும்பா + ஊர் என்பதிலிருந்து வந்தது, 'பெரும்' என்றால் 'பெரியது' என்றும் 'ஊர்' என்றால் 'இடம்' என்றும் பொருள்படும். பெரும்பாம்பு + ஊர் என்ற பொருளில் பெரிய பாம்புகள் இருக்கும் ஊர் என்று நம்புவோரும் உண்டு. இப்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் அடர்த்தியான வன நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. சித்த மருந்துகளை தயாரிக்கவும், பாம்பு இறைச்சி மற்றும் பாம்பு கொழுப்பை பயன்படுத்த இங்கிருந்த தமிழ் மக்கள் மலைப்பாம்புகளை வேட்டையாடினார்கள் என்று கூறப்படுகிறது.

அரசியல்

தொகு

பெரம்பவூர் சட்டமன்றத் தொகுதி சாலக்குடி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். பெரும்பவூரை சேர்ந்த எல்டோசு குன்னபில்லி தற்போதைய சட்டசபை உறுப்பினராவார், பென்னி பெகனன் தற்போதைய மக்களவை உறுப்பினராவார்.

நீதித்துறை நிறுவனங்கள்

தொகு

நீதித்துறையின் அதிகார வரம்பு முன்னர் ஆல்வே மற்றும் கோலஞ்சேரி நகரங்களை உள்ளடக்கி இருந்தது. பின்னர் இவை பிரிக்கப்பட்டன. இதில் ஒரு தலைமை நீதித்துறை நீதிமன்றம், மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம், துணை நீதிபதி நீதிமன்றம் ஆகியவை உள்ளன.

பொருளாதாரம்

தொகு

பெரும்பாவூர் ஒரு முக்கிய விவசாய நகரம் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய ஒட்டு பலகை தொழில்கள். நடைபெறும் இடமாகும். ரப்பர், மிளகு, இஞ்சி, மஞ்சள், வாழைப்பழம், காய்கறிகள், தேங்காய், சாதிக்காய், கோகோ, அரிசி, பாக்கு , கிராம்பு போன்ற பொருட்கள் உள்ளூர் சந்தையில் ஒவ்வொரு நாளும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த பொருட்களில் பெரும்பாலானவை கொச்சியில் உள்ள முக்கிய ஏற்றுமதியாளர்களுக்கு அல்லது உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள பொருளாதார வளர்ச்சி அரசு மற்றும் தனியார் துறைகள் மற்றும் சிறு தொழில்களால் பகிரப்படுகிறது. பெரும்பாவூர் நகரம் கேரளாவில் மர வர்த்தகத்திற்கு ஒரு மிக முக்கியமான நகரமாகும்.

தொழிற்சாலைகள்

தொகு

•திருவிதாங்கூர் ரேயன்சு •நக்லிக்கட்டு குரூப் இன்டர்நேசனல் •ஆத்ரி குரூப் இன்டர்நேசனல் •கப்சன்சு ஒட்டு பலகைகள் மற்றும் தொழிற்சாலைகள் •என்கோவுட் பிளைவுட் •ஆத்ரி குளோபல் டிரேடிங் கம்பெனி •கேலக்சி ஒட்டு பலகைகள் •தென்னிந்திய சா மில் •துக்கலில் எசுடேட்சு •அசுபான் டிரேடர்கள் •கட்டார்குடி மர ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் •பெர்பக்ட் சாமில் மற்றும் தொழிற்சாலைகள் •தென்னிந்திய தளவாடங்கள் •எஃப் & எஃப் தளவாடங்கள் கடை •துக்கலில் கிடங்குகள் •ஏபிகே மர தொழில்கள் •உம்மானி வைனீர்கள் மற்றும் ஒட்டுப் பலகைகள் •சுவப்னா ஒட்டு பலகைகள் •மாலிகியூல் கனிம நீர் ஆலை •கமலியா ஒட்டு பலகைகள் (அன்வர் தொழிற்சாலைகள் •உபேந்திர ஒட்டு பலகை •பி.கே.ஏ இண்டசுட்ரீசு •ஐடியல் மரத் தொழில்கள் •நிலா மர வர்த்தகர்கள் •கே.எம் கார்ப்பரேசன் கிரானைட் மற்றும் மார்பிள் •பிரீமியம் பிளைவுட் குருப்பம்பாடி

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

தொகு

பெரும்பாவூர் நகரத்தின் பொருளாதாரம் வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது. அவர்களுக்கு தொழிலாளர் முகாம்கள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி உள்ளிட்ட சுகாதார மற்றும் கல்வி பராமரிப்பு போன்ற அனைத்து வசதிகளையும் பெரும்பாவூர் வழங்குகிறது.

சுற்றியுள்ள ஊர்கள்

தொகு

சுற்றுலாத்தலங்கள்

தொகு
  • கோடநாடு
  • பாணியேலி அருவி
  • கல்லில் ஜைனர் கோயில்
  • இரிங்ஙோள் வனம்
  • கப்ரிக்காடு

ஆலயங்கள்

தொகு
  • பெத்தேல் சுலோக்கோ யாக்கோபாய சூரியானி தேவாலயம்
  • பெரும்பாவூர் மசூதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Perumbavoor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாவூர்&oldid=3995578" இலிருந்து மீள்விக்கப்பட்டது