இரிசா வெக்சுலர்
இரிசா எச். வெக்சுலர் (Risa H. Wechsler) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் SLAC தேசிய சுழன்முடுக்கி ஆய்வகத்தில் வானியற்பியல், துகளியற்பியல் பேராசிரியராகவும் உள்ளார்.[1] இவர் காவ்லி துகள் வானியற்பியல், அண்டவியல் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.[2] இவர் 2017 இல் இருந்து அமெரிக்க இயற்பியல் கழகத்தின் தெரிவுசெய்த ஆய்வுறுப்பினராக உள்ளார்.[3]
இரிசா வெக்சுலர் | |
---|---|
பிறப்பு | சீட்டில், வாழ்சிங்டன்(மாநிலம்), அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல், அண்டவியல், வானியற்பியல் |
பணியிடங்கள் | சுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு |
இணையதளம் risawechsler |
இவர் அண்டவியல் வல்லுனர்; பால்வெளி உருவாக்கத்திலும் அண்டப் பேரியல் கட்டமைப்பிலிம் புலமை சான்றவர்.[4] இவரது ஆர்வ்ம் வானியற்பியலிலும் கரும்பொருண்மத்திலும் கருப்பு ஆற்றலிலும் பொதிந்துள்ளது.[3] இவர் 2018 வரை கருப்பு ஆற்றல் கதிர்நிரல் கருவி கூட்டுமுனைவுக்கான இணை பரப்புரையாளராக விளங்கினார்.[5] இவர் கருப்பு ஆற்றல் அளக்கையில் முன்னணிப் பங்களிப்பு செய்துள்ளார்.[6]
கருப்பு ஆற்றலின் கமுக்கம் எனும் பி.பி.சி. ஒரைசன் அலைக்காட்சியிலும் [7] அறிவிய்ல் அலைநிரலின் விண்வெளி ஆழ்கமுக்கங்கள்: பெருவெடிப்பு வரலாற்றின் கமுக்கம் எனும் அலைக்காட்சியிலும் [8] கரும்பொருண்மங்கள் எனும் PBS அலைக்காட்சியிலும் தோன்றியுள்ளார்.[9] இவ 2019 இல் சான்பிரான்சிசுக்கோவில் உள்ள தற்கால யூத அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருள் ஒன்றை ஆக்சாசு அயோபெமியுடன் இணைந்து காட்சிப்படுத்தி உள்ளார்.[10]
கல்வி
தொகுஇவர் தன் இயற்பியல் இளவல் பட்டத்தை 1996 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். தன்முனைவர் பட்டத்தை சாந்தா குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2001 இல் பெற்றார்.[1] இவர் 2003 முதல் 2006 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நாசாவின் அபுள் ஆய்வுறுப்பினராக உள்ளார்.[11]
வெளியீடுகள்
தொகுவெக்சுலரின் வெளியீடுகள் இங்கே உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Risa Wechsler". stanford.edu. பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.
- ↑ Gnida, Manuel. "Risa Wechsler named director of KIPAC". SLAC National Accelerator Laboratory. பார்க்கப்பட்ட நாள் 16 December 2018.
- ↑ 3.0 3.1 "SLAC's Risa Wechsler named American Physical Society Fellow". eurekaalert.org. October 1017. Archived from the original on டிசம்பர் 1, 2017. பார்க்கப்பட்ட நாள் November 27, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Risa Wechsler". பார்க்கப்பட்ட நாள் November 27, 2017.
- ↑ "DESI Team". பார்க்கப்பட்ட நாள் November 27, 2017.
- ↑ "Dark matter map puts Big Bang theory on trial". பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.
- ↑ "BBC Horizon: The Mystery of Dark Energy". பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.
- ↑ "அறிவிய்ல் அலைநிரலின் விண்வெளி ஆழ்கமுக்கங்கள்: பெருவெடிப்பு வரலாற்றின் கமுக்கம் எனும் அலைக்காட்சியிலும்". பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.
- ↑ "PBS Science Bytes: Dark Matters". பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.
- ↑ "In That Case: Havruta in Contemporary Art—Oxossi Ayofemi and Risa Wechsler". பார்க்கப்பட்ட நாள் November 12, 2019.
- ↑ "Hubble Fellows". பார்க்கப்பட்ட நாள் March 17, 2018.