இரிசிகேசு ரனதே

இரிசிகேசு ரனதே (Hrishikesh Ranade)(பிறப்பு: 1981 அக்டோபர் 18) இவர் மராத்தித் திரையுலகில் ஓர் இந்திய பின்னணி பாராவார். இவர் இந்தி, மராத்தி மற்றும் வேறு சில இந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஐடியா சா ரி கா மா பா மகாராட்டிராச்சா அஜச்சா ஆவாஜ் விருதினை வென்றுள்ளார்.[1][2][3]

இரிசிகேசு ரனதே
இயற்பெயர்இரிசிகேசு
பிறப்பு18 அக்டோபர் 1981 (1981-10-18) (அகவை 43)
புனே, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி பாடுதல்,
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2000–தற்போது வரை

குழந்தைப் பருவம்

தொகு

இவர்,இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், இவரது தந்தை பிரமோத் ரனதேவும் நன்கு அறியப்பட்ட மராத்தி பாடகராவார். பண்டிட் விஜய் கோபர்கர், சேகர் கும்போஜ்கர் ஆகியோரிடமிருந்து ஆரம்ப பயிற்சியினைப் பெற்றார்.[1]

தொழில்

தொகு

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளையும், ஒளி இசை மற்றும் திரைப்பட இசையில் பல்வேறு விழாக்களையும் செய்துள்ளார். பாடகி சிரேயா கோசலுடன் 2013 ஆம் ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையத்தின் 18 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது மேடை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இதில் சில வெற்றி பெற்ற பாடல்களைப் பாடினார்.[4] பின்னர் 2013 ஆம் ஆண்டில், இவர் இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளின் சுற்றுப்பயணத்தில் சிரேயா கோசலுடன் சென்றார். அதில் இவர்கள் ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் பாடினர். இது 100 ஆண்டுகால பாலிவுட்டின் கொண்டாட்டமாக இருந்தது. இருவரும் பாலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.[5] இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரங்கத்தில் இவர்கள் ஒரு சிறந்த நிகழ்ச்சியைக் கொண்டிருந்தனர். 2013 மே 17 அன்று இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா துடுப்பாட்டச் சங்க மைதானத்தில் நிகழ்ச்சியை நிகழ்த்தினர்.[6][7]

  • 2015 சனவரி 10 அன்று புனே,இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடந்த நேரடி இசை நிகழ்ச்சியில் சிரேயா கோசலுடன் பாடினார்.
  • சனிவார்வாடா திருவிழாவிலும் இவர் தனது நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.[8]
  • மிர்ச்சி இசை விருதுகள் என்ற மராத்தி விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.[9]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர், பாடகர் பிரஜ்கா ஜோஷி என்பவரை மணந்தார். இவர்க்ளுக்கு ஒரு மகள் உள்ளார்.[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Show stealer
  2. "Pune's Hrishikesh Ranade wins Sa Re Ga Ma Pa Maharashtracha Ajacha Awaaj". Archived from the original on 24 June 2013. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
  3. "winner-sa-re-ga-ma-pa-final". Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  4. "Annual day celebration of Airports Authority of India" இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616045951/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-05/delhi/38305826_1_shreya-ghoshal-gurdas-maan-audience. பார்த்த நாள்: 11 June 2013. 
  5. "Shreya Ghoshal at the Royal Albert Hall". Archived from the original on 1 June 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  6. "Shreya Ghoshal performs in Sharjah". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.
  7. Shreya Ghoshal Returns to Leicester for Sold Out concert
  8. Shaniwarwada festival from Thursday
  9. "Mirchi Music Awards Marathi". Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. Pramod Ranade
  11. "Relative VALUES SHARING PERSONAL AND PROFESSIONAL SPACE Hrishikesh & Prajakta Ranade". Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிசிகேசு_ரனதே&oldid=4169833" இலிருந்து மீள்விக்கப்பட்டது