இரிடியம்(IV) புளோரைடு
இரிடியம்(IV) புளோரைடு (Iridium(IV) fluoride) என்பது IrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அடர் பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது [1]. 1965 ஆம் ஆண்டுக்கு முன் இரிடியம்(IV) புளோரைடு தொடர்புடைய விளக்கங்கள் IrF5 சேர்மத்தைக் குறித்து விளக்குவது போலவே தோன்றுகின்றன [1]. கருப்பு இரிடியத்தை [1], IrF5 உடன் சேர்த்து அல்லது நீர்த்த ஐதரசன் புளோரைடிலுள்ள ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி [2] இரிடியம்(IV) புளோரைடு திண்மத்தைத் தயாரிக்கிறார்கள். முப்பரிமான அணிக்கோவை படிகக் கட்டமைப்பில் உள்ள ஒரு உலோகடெட்ராபுளோரைடுக்கு இதுவே முதலாவது உதாரணமாகும். இதே கட்டமைப்பில் உள்ள டெட்ராபுளோரைடுகளாக RhF4, PdF4 மற்றும் PtF4 போன்ற சேர்மங்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன [3]. எண்முக வடிவில் ஆறு ஒருங்கிணைவுகள் கொண்ட இரிடியம் இக்கட்டமைப்பில் உள்ளது. எண்முக இரிடியத்தின் இரண்டு விளிம்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டும், இரண்டு புளோரின் அணுக்கள் பகிர்ந்து கொள்ளப்படாமலும் ஒன்றுடன் ஒன்றாக ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன [3].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரிடியம் டெட்ராபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
37501-24-9 | |
பண்புகள் | |
IrF4 | |
வாய்ப்பாட்டு எடை | 268.2109 கி/மோல் |
தோற்றம் | அடர்பழுப்பு நிற திண்மம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இரிடியம் டையாக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் புளோரைடு, பொட்டாசியம் புளோரைடு, சீசியம் புளோரைடு, கால்சியம் புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Paine, Robert T.; Asprey, Larned B. (1975). "Reductive syntheses of transition metal fluoride compounds. Synthesis of rhenium, osmium, and iridium pentafluorides and tetrafluorides". Inorg. Chem. 14 (5): 1111–1113. doi:10.1021/ic50147a030.
- ↑ 3.0 3.1 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6