இரிடியம் மூவைதரைடு

வேதிச் சேர்மம்

இரிடியம் மூவைதரைடு (Iridium trihydride) என்பது IrH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உயர் அழுத்தத்தில் இரிடியமும் ஐதரசனும் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது. இரிடியம் மூவைதரைடின் படிக வடிவம் உருக்குலைந்த எளிய கனசதுர வடிவத்தில் உள்ளது. படிக கனசதுரத்தின் முகங்களின் மையத்தில் ஐதரசன் அணுக்கள் உள்ளன. இரிடியம் அணு கனசதுரத்தின் மையத்தில் உள்ளது. 55 கிகா பாசுக்கல் அழுத்தத்திற்கு மேலான அழுத்தத்தில் இது உருவாகிறது.[1]

இரிடியம் மூவைதரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரிடியம்(III) ஐதரைடு
இனங்காட்டிகள்
ChemSpider 24772384
InChI
  • InChI=1S/Ir.3H
    Key: DBPBAPSFGLNQOX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12055421
  • [IrH3]
பண்புகள்
H3Ir
வாய்ப்பாட்டு எடை 195.24 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம் மூவைதரைடின் பருமக் குணகம் 190 கிகா பாசுக்கல் ஆகும். இது இரிடியத்தின் பருமக் குணகத்தைக் காட்டிலும் குறைவாகும். இரிடியத்தின் பருமக் குணகம் 383 கிகா பாசுக்கல் ஆகும்.

அழுத்தம் 6 கிகா பாசுக்கல் அளவுக்கு குறைக்கப்படும் போது இரிடியம் மூவைதரைடின் சிதைவு மெதுவாக இருக்கும், மேலும் வளிமண்டல அழுத்தங்களில் அது சிற்றுறுதி நிலைத்தன்மையோடு இருக்கும்.

அழுத்தம் 14 கிகா பாசுக்கல் அளவுக்கு மேல் இருந்தால் இரிடியம் மூவைதரைடு நிலைப்புத் தன்மை கொண்டிருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Scheler, Thomas; Marqués, Miriam; Konôpková, Zuzana; Guillaume, Christophe L.; Howie, Ross T.; Gregoryanz, Eugene (19 November 2013). "High-Pressure Synthesis and Characterization of Iridium Trihydride". Physical Review Letters 111 (21): 215503. doi:10.1103/PhysRevLett.111.215503. பப்மெட்:24313503. Bibcode: 2013PhRvL.111u5503S. http://bib-pubdb1.desy.de/record/166935/files/PhysRevLett.111.215503.pdf. 
  2. Zaleski-Ejgierd, Patryk (2014). "High-pressure formation and stabilization of binary iridium hydrides". Physical Chemistry Chemical Physics 16 (7): 3220–9. doi:10.1039/C3CP54300E. பப்மெட்:24406641. Bibcode: 2014PCCP...16.3220Z. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்_மூவைதரைடு&oldid=3379093" இலிருந்து மீள்விக்கப்பட்டது