இரித்திகா தத்து

இரித்திகா தத்து (Ritika Dutt) என்பவர் கனடா தொழில்முனைவோர் ஆவார். இவர் சட்டப்பூர்வ செயற்கை நுண்ணறிவு நிறுவனமான போட்லர் AIஇன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

தத்து இந்தியாவில் பிறந்தார். இவரது குழந்தைப் பருவத்தை ஹாங்காங்கிலும் பருவ வயதினை சிங்கப்பூரிலும் கழித்தார்.[2] 2009ஆம் ஆண்டில், இவர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர கனடாவின் மான்ட்ரியல் நகருக்குச் சென்று 2013 ஆம் ஆண்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கையில்

தொகு

மெக்கிலிலிருந்து பட்டம் பெற்ற பிறகு, ஒய் காம்பினேட்டர் என்ற புதுமுகத் தொழில் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் துறைக்குத் தலைமை தாங்கினார்.[4] பின்னர் தொழில்முனைவோர் தொழில்நுட்ப மையமான மாண்ட்ரீலின் கூகிள் நோட்மேன் அவுசின் உள் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டார். இங்கு புதுமையான முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் புதுமைத் தொழில் விரும்பும் சமூகத்தை வளர்த்தார்.[5][6]

பொருளாதாரம் மற்றும் புதுமை புனைதலில் தனது பின்னணியைப் பயன்படுத்தி, தத்து பின்னர் 2017ஆம் ஆண்டில் போட்லர் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரானார். செயற்கை நுண்ணறிவு மூலம் சட்ட அமைப்புகளை அணுகும் முறைகளில் மேம்பாட்டை ஏற்படுத்தினார்.[7]

போட்லர் ஏஐ

தொகு

2017 ஆம் ஆண்டு திசம்பரில், தனது தனிப்பட்ட அனுபவங்களால் நடவடிக்கை எடுக்க தூண்டப்பட்ட தத்து, பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க உதவும் ஒரு இலவச கருவியைத் தொடங்க போட்லர் AIஐ வழிநடத்தினார்.[8] தீர்ப்புக்கு அஞ்சாமல், தகவல் மற்றும் கல்வி மூலம் சராசரி மனிதனை அதிகாரம் செய்வதற்கான ஒரு பக்கச்சார்பற்ற வளமாக அமைவது இந்தக் கருவியின் உருவாக்கத்தின் நோக்கமாக இருந்தது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ritika Dutt via Crunchbase.com". Crunchbase.com. Archived from the original on 2019-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
  2. "*Ritika on Instagram: "I was born in India, spent my childhood in Hong Kong & my teenage years in Singapore. 10 years ago today, I set foot in Canada for the…"". Instagram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
  3. "Applying AI to the #MeToo landscape". mcgillnews.mcgill.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
  4. "Ritika Dutt". Startupfest (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  5. Montreal.TV. "Soirée Startup et Croissance à Montréal". Montreal.TV (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  6. Faggella, Daniel. "The State of AI in Montreal – Startups, Investment, and What it Means for the City". Emerj (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  7. Startupfest (2018-07-06). "Cutting through the legal jargon — Ritika Dutt on how AI can help navigate the system". Medium. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  8. Desmond, John (2018-07-26). "Montreal-Toronto AI Startups Have Wide Range of Focus". AI Trends (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  9. "Botler.ai launches sexual harassment detection bot for U.S. and Canada". VentureBeat (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரித்திகா_தத்து&oldid=3593461" இலிருந்து மீள்விக்கப்பட்டது