இரிமாவ் தீவு
மலேசியாவில் உள்ள ஒரு தீவு
ரீமாவ் தீவு (மலாய்: Pulau Rimau; ஆங்கிலம்:Rimau Island) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பினாங்கு |
ஆள்கூறுகள் | 05°14′51″N 100°16′21″E / 5.24750°N 100.27250°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | மலாக்கா நீரிணை |
நிர்வாகம் | |
பினாங்கு மாநிலம் |
பினாங்கு தீவின் தென்கிழக்கு முனையில் இருந்து ஏறக்குறைய 0.832 கி.மீ (0.517 மைல்) தொலைவில் ரீமாவ் தீவு அமைந்துள்ளது. மக்கள்தொகை இல்லாத இத்தீவில் தற்போது கலங்கரை விளக்கம் செயல்படுகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் 1885-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.[1][2]
இந்தக் கலங்கரை விளக்கம், விளக்கு மற்றும் காட்சிக் கூடத்துடன் கூடிய 17 மீ (56 அடி) உருளை வடிவ வார்ப்பிரும்பு கோபுரமும், காப்பாளருக்கான ஒரு மாடி வீடும் கொண்டு, தெற்கில் இருந்து பினாங்கு நீரிணைக்குள் நுழையும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Amiruddin, A. r. "Living the lighthouse life - Views | The Star Online". பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
- ↑ 2.0 2.1 "Guardian angels of ships" (in en). NST Online. 2017-08-06. https://www.nst.com.my/lifestyle/sunday-vibes/2017/08/264675/guardian-angels-ships.