இரீட்டா தேவி
இரீட்டா தேவி (Reeta Devi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது இந்தோரா சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1][2][3] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தோரா தொகுதியில் போட்டியிட்டு இரீட்டா தேவி வெற்றி பெற்றார்.[4][5]
இரீட்டா தேவி Reeta Devi | |
---|---|
சட்ட மன்ற உறுப்பினர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
முன்னையவர் | மனோகர் திமான் |
தொகுதி | இந்தோரா சட்டப்பேரவை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 நவம்பர் 1975[1] Bhugnara, காங்ரா, இமாச்சலப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | துலோ ராம் கிருட்டிணா தேவி |
வாழிடம்(s) | Surajpur, Indora, காங்ரா, இமாச்சலப் பிரதேசம் |
கல்வி | 12 ஆவது, தொழிற் பயிற்சி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசத்தின் காங்ராவில் உள்ள புக்னாராவில் துலோ ராம் மற்றும் கிருட்டிணா தேவி ஆகியோருக்கு மகளாக தேவி பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை இடைநிலைக் கல்வி வரை பயின்றார். பின்னர் தொழிற்கல்வியாக தர்மசாலாவில் வெட்டுதல் மற்றும் பூத்தையல் பிரிவில் பட்டயம் பெற்றார்.[1]
அரசியல்
தொகு2010 ஆம் ஆண்டு முதல் தேவியின் தீவிர மாநில அரசியல் பிரவேசம் தொடங்கியது.[1] பின்னர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இவர் பதின்மூன்றாவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Details of MLA Reeta Devi". hpvidhansabha.nic.in.
- ↑ "Reeta Devi won from Indora constituency in Himachal Pradesh Legislative Assembly election results live". https://www.thehindu.com/elections/himachal-pradesh-2017/live-updates-himachal-pradesh-legislative-assembly-election-results/article21830225.ece.
- ↑ "Pdf ― list of Himachal Pradesh 2017 Legislative election winning candidates". Election Commission of India.
- ↑ "Reeta Devi won from Indora constituency in Himachal Pradesh Legislative Assembly 2017 elections". NDTV. https://www.ndtv.com/elections/himachal-pradesh/indora-mla-results.
- ↑ "Reeta Devi won from Indora constituency by defeating INC candidate Kamal Kishore". Times Now News. https://www.timesnownews.com/himachal-pradesh-assembly-election/article/indora-constituency-hp-elections-bjp-congress-katoch-clan/121436.
- ↑ "Reeta Devi won from Indora constituency in Himachal Pradesh Assembly election 2017-full list winners". The Indian Express. https://indianexpress.com/elections/himachal-pradesh-assembly-elections-2017/himachal-pradesh-election-2017-full-list-of-winners-live-updates-4988241/.
- ↑ "ADR data on Criminal and asset declaration of Reeta Devi, winner of Indora assembly constituency". My Neta Info.