இருகுளோரோமெத்தில் மெத்தில் ஈதர்

இருகுளோரோமெத்தில் மெத்தில் ஈதர் (Dichloromethyl methyl ether) என்பது HCl2COCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இருகுளோரோமெத்தில் குழுவும் ஒருமெத்தில் குழுவும் சேர்ந்து உருவாகும் ஈதராக இது வகைப்படுத்தப்படுகிறது. பாசுபரசு பெண்டா குளோரைடு மற்றும் பாசுபரசு ஆக்சிகுளோரைடு ஆகியவற்றின் கலவையுடன் மெத்தில் பார்மேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம்.[1] குளோரோயிருமெத்தில் ஈதரை குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்க முடியும்.

இருகுளோரோமெத்தில் மெத்தில் ஈதர்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோ(மீத்தாக்சி)மெத்தேன்
இனங்காட்டிகள்
4885-02-3
ChemSpider 19757
InChI
  • InChI=1S/C2H4Cl2O/c1-5-2(3)4/h2H,1H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21004
SMILES
  • ClC(Cl)OC
பண்புகள்
C2H4Cl2O
வாய்ப்பாட்டு எடை 114.95 g·mol−1
கொதிநிலை 85°செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அரோமாட்டிக்கு சேர்மங்களை பார்மைலேற்றம் செய்யவும், அமிலக் குளோரைடுகள் உற்பத்தியில் குளோரினேற்றும் முகவர்களாகவும் இது பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Organic Syntheses, Coll. Vol. 5, p.365 (1973); Vol. 47, p.51 (1967). link
  2. Organic Syntheses, Coll. Vol. 7, p.467 (1990); Vol. 61, p.1 (1983). Link