இருகுளோரோயிருபுளோரோயீத்தேன்
இருகுளோரோயிருபுளோரோயீத்தேன் (Dichlorodifluoroethane) என்பது C2H2Cl2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,1-இருகுளோரோ-1,2-இருபுளோரோயீத்தேன் அல்லது ஆர்-132 என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. ஐதரோகுளோரோபுளோரோகார்பன் வகை சேர்மமான இது ஈத்தேனின் ஆவியாதல் வழிப்பெறுதியாகப் பெறப்படுகிறது. நிறமற்றும் மணமற்றும் எளிதில் தீப்பிடிக்காததுமான இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது.[2] இருகுளோரோயிருபுளோரோயீத்தேன் பயன்பாடு, 1990 ஆம் ஆண்டின் சுத்தமான காற்றுச் சட்டத் திருத்தங்கள் மூலம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையால் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்தம் ஓசோன் படலத்தைக் குறைக்கும் பொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக அகற்றும் நோக்கம் கொண்டதாகும். இருகுளோரோயிருபுளோரோயீத்தேன் ஓசோனைக் குறைக்கும் பொருளாகக் குறிப்பிடப்படுகிறது. இச்சேர்மம் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பொருள்களில் வகுப்பு II வகை பொருள் என்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை வகைப்படுத்தியுள்ளது.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோயிருபுளோரோயீத்தேன்
| |
வேறு பெயர்கள்
R-132, HCFC 132
| |
இனங்காட்டிகள் | |
25915-78-0 | |
ChemSpider | 30711 |
EC number | 207-307-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 33239 |
| |
UN number | 3082 |
பண்புகள் | |
C2H2Cl2F2 | |
வாய்ப்பாட்டு எடை | 134.93 g·mol−1 |
தோற்றம் | தெளிவு, நிறமற்றது. |
மணம் | நெடியற்றது |
உருகுநிலை | −106.5 °C (−159.7 °F; 166.7 K) |
கொதிநிலை | 45.1 °C (113.2 °F; 318.2 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | சுவாசிப்பது |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331 | |
P261, P264, P270, P271, <abbr class="abbr" title="Error in hazard statements">P301+316, P304+340, <abbr class="abbr" title="Error in hazard statements">P316, P321, P330, P403+233, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "System of Registries | US EPA". sor.epa.gov. பார்க்கப்பட்ட நாள் Sep 26, 2022.
- ↑ "1,1-Dichloro-1,2-difluoroethane". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் Sep 26, 2022.
- ↑ "System of Registries | US EPA". sor.epa.gov. பார்க்கப்பட்ட நாள் Sep 26, 2022.