இருதலை மணியன்

இருதலை மணியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Boidae
துணைக்குடும்பம்:
Erycinae
பேரினம்:
இனம்:
E. johnii
இருசொற் பெயரீடு
Eryx johnii
(Russell, 1801)
வேறு பெயர்கள்

இருதலை மணியன்[2] அல்லது சிவப்பு உழவன் பாம்பு நாட்டுப் புறத்தில் இருதலை பாம்பு (Eryx johnii ) என அழைக்கப்படுவது ஒரு பாம்பு ஆகும். இப்பாம்புகள் ஈரான் , பாக்கித்தான் , இந்தியா . போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[3]

விளக்கம்

தொகு
 
இருதலை மணியன்

வளர்ந்த இப்பாம்புகள் இரண்டு அடி (61 செ.மீ) நீளம் உடையவை. அரிதாக சில சமயம் மூன்று அடி (91 செ.மீ) உடையதாகவும் இருக்கும். இந்த பாம்பு வளைகளில் வாழக்கூடியது. இதற்கு ஆப்பு வடிவ குறுகிய மூக்கும், மிகச் சிறிய கண்களும் உள்ளன. உடல் கொஞ்சம் பளபளப்பான செதில்கள் கொண்டு உருளை வடிவில் தடித்த உடலுடன் இருக்கும். இதன் வால் மழுங்கி மொட்டையாக இருக்கும். இது செம்பழுப்பு மற்றும் சாம்பல் நிறம் அல்லது மஞ்சள்-பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த பாம்புகள் பயந்த, கூச்சம் நிறந்த பாம்பாகும். இது யாரையும் கடித்ததாக எந்த பதிவு இல்லை.[4]

புவியியல் எல்லை

தொகு

இப்பாம்பு ஈரானில் இருந்து பாக்கித்தான் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, தெற்கில், தரங்கம்பாடி, தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் காணப்படுகிறது.[1]

வாழ்விடம்

தொகு

இப்பாம்பு பாம்பு உலர்ந்த வறட்சி மிக்க சமவெளிகளிலும், குறுங்காடுகளிலும் காணப்படுகிறது. இது மணற் பாங்கான இடத்தை விரும்புகிறது.

நடத்தை

தொகு

இரவில் இரை தேடக்கூடிய மிகச்சாதுவான பாம்பு இது. பிடிக்கப்போனால் தனது உடலை சுருட்டி தலையை அதன் அடியில் வைத்துக்கொள்ளும். தன் மொட்டைவாலை ஆட்டி கவனத்தை திசைதிருப்பும்.

உணவு

தொகு

இதன் முக்கிய உணவு, எலிகள் போன்ற கொறித்துண்ணிப் பாலூட்டிகள் ஆகும்.

இனப்பெருக்கம்

தொகு

பெண் பாம்புகள் தன் உடலுக்குள்ளேயே முட்டைகளை வைத்திருந்து குஞ்சுகளை உண்டாக்கி ஒரு நேரத்தில் 14 குட்டிகள்வரை பெற்றெடுக்கும்.

சட்டவிரோத வர்த்தகம்

தொகு

இப்பாம்புகளுக்கு முன்பக்கமும் பின்பக்கமுமாக இரட்டைத் தலை உள்ளது போன்ற தோற்றம் காரணமாகவும், எய்ட்சுக்கு இதில் மருந்து உள்ளது என்ற தவறான நம்பிக்கையாலும் இவ்வகைப் பாம்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972, கீழ் இவ்வினங்களின் சட்டவிரோத வர்த்தகம் தடைசெய்யப்பட்டதாகும். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. "நல்ல பாம்பு 7: மண்ணுளியும் இருதலை மணியனும் ஒன்றா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
  3. "Eryx johnii". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 8 July 2008.
  4. Mehrtens JM. 1987. Living Snakes of the World in Color. New York: Sterling Publishers. 480 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8069-6460-X.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-08-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதலை_மணியன்&oldid=3652118" இலிருந்து மீள்விக்கப்பட்டது