இருமப் பன்முகி

வடிவவியலில் ஒவ்வொரு பன்முகிக்கும் ஒரு இரும வடிவம் உண்டு. இருமப் பன்முகத்திண்மங்கள் அல்லது இருமப் பன்முகிகள் (dual polyhedron, பன்மை: dual polyhedra) இரண்டில் ஒன்றன் உச்சிகளுக்கு ஒத்தவையாக மற்றதன் முகங்கள் இருக்கும். மேலும் ஒன்றன் உச்சிகளின் சோடிகளை இணைக்கும் விளிம்புகளுக்கு ஒத்ததாக மற்றதன் முகங்களின் சோடிகளுக்கு இடையிலுள்ள விளிம்புகள் இருக்கும்.[1] இரும வடிவங்கள் கருத்தியலானவை; எல்லா இருமங்களும் வடிவவியல் பன்முகிகளாக இருப்பதில்லை.[2] ஒரு பன்முகியின் இருமத்தின் இருமம் அதே பன்முகியாக இருக்கும்.

கனசதுரத்தின் இருமம் ஒரு எண்முகியாகும்.

இருமத்தன்மை ஒரு பன்முகியின் சமச்சீர்மையைப் பாதுகாக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சமச்சீர்மை தொகுதியிலுள்ள பன்முகிகளின் இருமங்கள் அதே சமச்சீர்மை தொகுதியைச் சேர்ந்ததாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக ஒழுங்கு பன்முகிகளான பிளேட்டோவின் சீர்திண்மங்களும் கெப்ளர்-பாயின்சாட்டு சீர்திண்மங்களும் இருமங்களாக இருக்கும். ஒழுங்கு நான்முகி, தனக்குத்தானே இருமம் (தன்-இருமம்) ஆகும்.

சில ஒழுங்குப் பன்முகிகளின் இருமங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

ஒரு பன்முகியின் இசுலாபிலிக் குறியீடு {n, m} எனில், அதன் இருமப் பன்முகியின் இசுலாபிலிக் குறியீடு {m, n}.

குறிப்புகள்

தொகு
  1. (Wenninger 1983), "Basic notions about stellation and duality", p. 1.
  2. (Grünbaum 2003)

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமப்_பன்முகி&oldid=3329212" இலிருந்து மீள்விக்கப்பட்டது