இருமெத்தில் குளோரோதயோபாசுபேட்டு
இருமெத்தில் குளோரோதயோபாசுபேட்டு (Dimethyl chlorothiophosphate) என்பது C2H6ClO2PS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தீங்குயிர்க்கொல்லிகள் மற்றும் நெகிழியாக்கிகள் போன்றவற்றை தயாரிக்கும்போது இடைநிலை வேதிப்பொருளாக இது உருவாகிறது. இச்சேர்மம் கந்தகம் மற்றும் குளோரின் அணுக்கள் கொண்ட ஓர் கரிமபாசுபேட்டு சேர்மம் ஆகும். மைய பாசுபரசு அணுவுடன் இவ்வணுக்கள் பிணைக்கப்பட்டுள்ளன.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
O,O-இருமெத்தில் பாசுபோரோகுளோரிட்டோதயோயேட்டு | |
வேறு பெயர்கள்
இருமெத்தில் குளோரோதயோபாசுபேட்டு; O,O-இருமெத்தில் பாசுபோரோகுளோரிடோதயோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
2524-03-0 | |
ChemSpider | 16374 |
EC number | 219-754-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 17304 |
| |
UNII | 8D5OSC5UN4 |
UN number | 2267 |
பண்புகள் | |
C2H6ClO2PS | |
வாய்ப்பாட்டு எடை | 160.55 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H302, H302, H311, H312, H314, H315, H318, H330, H331, H335, H412 | |
P260, P261, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1985 ஆம் ஆண்டில் அமெரிக்கன் சயனமிடு நிறுவனத்திலிருந்த எலுமிச்சை மரத்திலிருந்து இந்த இரசாயனம் தற்செயலாக வெளிப்பட்டது. 32 கி.மீ தொலைவில் இதன் வாசனையை உணர முடிந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ New Jersey Right to Know and Act Coalition (1989). "Testimony". பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.