இருமைக் கொள்கை

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

இருமைக் கொள்கை (Dualism) பிரபஞ்சம் எதனால் ஆக்கப் பெற்றுள்ளதோ, அதன் தன்மையை ஆராயத் தொடங்கிய காலமே தத்துவ விசாரணையின் வைகறையாகும். அதன் காரணமாகக் கீழ் நாட்டிலும் மேல் நாட்டிலும் பல கொள்கைகள் எழுந்தன. பிரபஞ்சமானது ஒன்று, இரண்டு, அல்லது பல மூலப் பொருள்களிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்னும் நம்பிக்கையே இந்தக் கொள்கைகளின் அடி நிலை மூலப் பொருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருமைக்கொள்கை (Monism), இருமைக் கொள்கை, பன்மைக் கொள்கை (Pluralism) என்னும் மூன்று தத்துவக் கொள்கைகள் காணப்படுகின்றன.

  1. சடப்பொருளோ, மனப்பொருளோ, எதுவாயினும் ஒரே ஒரு மூலப்பொருளே உண்டு என்று கூறுவது ஒருமைக் கொள்கை.
  2. ஒன்றுக்கொன்று முரணான இரண்டு மூலப்பொருள்கள் உண்டு என்று இருமைக்கொள்கை கூறுகிறது.[2][3]
  3. ஒன்றுமன்று, இரண்டுமன்று, பல மூலப் பொருள்கள் உண்டு என்று கூறுவது பன்மைக் கொள்கை. இந்த மூலப்பொருள்கள் சடப் பொருள்களாகவும் இருக்கலாம், மனப்பொருளாகவு மிருக்கலாம் என்றும் அது கூறுகிறது.
Dharmakīrti,[1] புத்தக் கொள்கை

தோற்றம்

தொகு
 
Portret van René என்ற சுவீடிய அறிஞரே, இருமைக் கொள்கையில் அறிவியலைப் புகுத்தியவர்

இருமைக் கொள்கை முதன் முதல் காணப் பட்டது சமயக் கொள்கையிலே யாகும். சாத்தானும் கடவுளுடனே தோன்றிக் கடவுளைப் போலவே அழியாப் பொருளாக உளன் என்று கிறித்தவ சமயக்கொள்கை கூறுகிறது. இந்தக் கருத்து நாளடைவில் வேறு வேறு பொருள் பெற்று, ஆத்மிகம், இலௌகிகம் என்ற இருமைக்கொள்கை ஆயிற்று. ஆத்ரீகம் கடவுளையும் நன்மையையும் குறிக்கும்; இலௌகிகம் சாத்தானையும் தீமையையும் குறிக்கும். இதன் காரணமாக எழுந்ததே துறவறக்கொள்கை. துறவிகள் இலௌகிக வாழ்க்கையைத் தீமையாக எண்ணி, அதைத் துறந்து வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருபைக் கொள்கைக்குத் தத்துவப் பொருள் தரப்பட்டது. நம்முடைய அனுபவமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பொருள் அனுபவமாகவே இருக்கிறது என்று இருமைக்கொள்கை கூறுகிறது. மனிதனானவன் உடல், மனம் என்னும் இரண்டும் சேர்ந்த ஒரு பொருளாவான். இதுபோலவே மனிதனுடைய அறிவும், மனிதன் அறியும் பொருளும் என்ற ஓர் இரு மையும் உள்ளது. கடவுள், சாத்தான் என்ற இருமையை மதமும், நன்மை தீமை என்ற இருமையை அற நூலும் கூறுகின்றன. இவ்வாறு நம்முடைய அனுபவத்தில் காணப்படும் இருமைகளின் முரண்பாடுகளை விடுவிக்க முயல்வதையே இருமை கொள்கையின் வரலாறு கூறுகிறது.

ஐரோப்பா

தொகு

மேனாட்டில் இந்தத் தத்துவக் கருத்தில் இருமைக் கொள்கையை முதன் முதலாகக் கூறியவர் பண்டைக் கிரேக்கத் தத்துவ சாஸ்திரி ஆனாக்சகோரஸ் என்பவராவர். உடலையும் உள்ளத்தையும் வேறுவேறு பொருளாக முதன் முதல் கருதியவர் அவர் தாம். அவர் காலத்திருந்தவரும் அணுக் கொள்கையை முதன் முதலாகக் கூறிய வருமான டெமோக்கிரிட்டஸ் என்பவர் இந்த இருமைக் கொள்கைக்கு ஆதரவு அளித்தார். அடுத்த பெரிய இருமைக் கொள்கையர் பிளேட்டோ ஆவர். அவருடைய இருமைக் கொள்கையானது கருத்துக்கள் பற்றிய கொள்கையிலே உற்பத்தியாயிற்று. கருத்துக்களே உண்மையான உள்பொருள்கள் என்பதும், அந்த நித்தியமான கருத்துக்களின் புறத் தோற்றமே புலன்களால் அறியப்படும் சடமாகிய உலகம் என்பதும் அவருடைய கருத்து. பிளேட்டோவின் புகழ்வாய்ந்த மாணவரான அரிஸ்டாட்டில், பிளேட்டோ கூறும் கருத்துக்கள் என்னும் பொருள் அனுபவத்துக்கு எட்டாதவை என்று ஏற்றுக் கொள்ளாமல், சடம், உருவம் என்ற இருமைக் கொள்கையைக் கூறுகிறார். நம்முடைய அனுபவம் எல்லாம் சடம் பற்றிய தென்றும், அதில் நிறைந்து நிற்கும் பொது உருவத்தையே நாம் அறிகிறோம் என்றும் கூறுகிறார். இவ்வாறு இருமைக்கொள்கை பண்டைக் கிரேக்கத் தத்துவ சாஸ்திரிகளிடம் காணப்பட்டபோதிலும் கணிதத் தத்துவ சாஸ்திரியான டேக்கார்ட் என்பவரே மனம்-சடம் என்ற இருமைக் கொள்கைக்கு உறுதியான அடிநிலையை அமைத்தவர். அவரே தத்துவ சாஸ்திர ஆராய்ச்சிக்கும், விஞ்ஞான முறைகளைக் கையாண்டவர்.

மனமும் சடமும் ஒன்றுக்கொன்று முரணான பொருள்கள் என்றும், மனத்தின் பண்பு. எண்ணம், சடத்தின் பண்பு பரப்பு என்றும் தெளிவு படுத்தினார். டேக்கார்ட் கூறிய இருமைக்கொள்கையானது, ஆட்சேபங்கள் பல கூறக்கூடியதாக இருக்கிறது. உடலும் உள்ளமும் ஒன்று சேர்ந்தே நம்முடைய அனுபவத்தில் காணப்படுகின்றன. அப்படியிருக்க அவை இரண்டும் வேறுவேறான பொருள்கள் என்று டேக்கார்ட் கூறுவதை ஏற்றுக்கொள்வதில் மறுப்புகள் ஏற்பட்டன.

அறியும் மனம் அறியப்படும் பொருள் என்பது இருமைக் கொள்கையின் மற்றோர் உருவமாகும். அறிதல் என்பது அதற்குப் புறம்பான பொருள்களை அறிவதாகும். அனால் இந்தப் புறம்பான பொருள்களைப் புலன் காட்சி மூலமாகவே அறிய முடியும். லாக், பார்க்ளே, கான்ட் ஆகிய மூன்று பெரிய தத்துவ ஞானிகள் இந்தக் கேள்வியை எழுப்பி விடை கூறியிருக்கின்றனர். கான்ட் என்பவருடைய கருத்துத்தான் அளவை இயற்கொள்கை (Epistemology), உண்மை இயல்(Ontology)பற்றி இக்காலத்தில்வழங்கும் கொள் கைகளுக்கு அடிநிலை யாகும். கான்டின் கொள் கையாவது நேரில் அறிய முடி யாத உள்பொருள் ஒன்றிலிருந்தே நேரில் அறியும் உல கம் தோன்றியிருக்கிறது என்பதும், அந்த உள்பொருள் புலன்களைத்தூண்டு வதைக் கொண்டு மனம் படைப்பது மூலமே நாம் அந்த உள் பொருளை அறிவதாகக் கூறுகிறோம் என்பதுமே யாகும். அறிவின் வகைகள் மனப்பண்புடையவை. உள் பொருள் சடப்பண்புடையது. இவ்விரண்டு இனங்களே, அறிவு என்பதன் இணைபிரியாக் கூறுகளாகும். இருமைக் கொள்கையில் தொடங்கி சிலர் பன்மைக்கொள்கையினையும், வேறுசிலர் ஓர்மைக் கொள்கையினையும் பற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Georges B.J. Dreyfus, Recognizing Reality, SUNY Press 1996 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791430989)
  2. Jeaneane D. Fowler (2002). Perspectives of Reality: An Introduction to the Philosophy of Hinduism. Sussex Academic Press. pp. 238–243, 288–293, 340–343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898723-94-3.
  3. James Lochtefeld (2002), The Illustrated Encyclopedia of Hinduism, Volume 1 & 2, Rosen Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8239-2287-1, pages 12-13, 213-214, 758-759

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமைக்_கொள்கை&oldid=2866545" இலிருந்து மீள்விக்கப்பட்டது