ஞானி கர்ம யோகத்தைப் பயின்று மனத்தூய்மை அடைந்தவன். அதன் பின் ஞான யோகத்தைப் பயின்று ஞானத்தில் நிலை பெற்றவனைப் பகவான் இங்கு ஞானநிஷ்டன் என்று ஞானியை சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

எவன் தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருக்கின்றானோ அவனே (Happy with Himself) ஞானி ஆவான். தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே ஞானி ஆவான். வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை, அகிம்சை, முமுச்சுத்துவம் போன்ற நற்குணங்கள் பெற்றவனையே ஞானியின் இலக்கணமாகக் கூறப்படுகிறது.

இந்த ஆத்ம ஞானத்தை அறிந்த ஞானி மரணத்திற்கு முன் சீவ முக்தியும், உடல் அழிந்த பின்பு பிரம்ம நிர்வானம் எனும் விதேக முக்தியும் அடைகிறான். விதேக முக்தி அடைந்த ஞானிக்கு மறுபிறவி இல்லை.

உசாத்துணை

தொகு
  • பகவத் கீதை, அத்தியாயம் இரண்டு மற்றும் பதினெட்டு.

வெளி இணைப்புகள்

தொகு
  • பகவத் கீதை அத்தியாயம் இரண்டு [1]
  • பகவத் கீதை அத்தியாயம் பதினெட்டு [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானி&oldid=4054544" இலிருந்து மீள்விக்கப்பட்டது