அறிவியல்

அறிவை உருவாக்கி ஒழுங்கமைக்கும் முறைப்படுத்தப்பட்ட துறை
(விஞ்ஞானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அறிவியல் (ஒலிப்பு) (Science) என்பது "அறிந்து கொள்ளுதல் " எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[2][3][4] அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.

பெரிய ஃஆட்ரான் மொத்தியின் ஒரு பகுதி, இயற்பியல் செய்முறைக் கருவி
மரபனின் ஒரு பகுதிக் கட்டமைப்பின் அசைவூட்டம். மரபைன் அடிமன்ங்கள்கிடைநிலையில் இரு சுருளிப் புரிகளுக்கு இடையில் அமைகின்றன.[1]
வேதியியலின்அடிப்படையான தனிம வரிசை அட்டவணை
கபிள் விண்வெளித் தொலைநோக்கி

நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன .[5] அறிவியல் அறிவைப் பயன்படுத்தும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.[6] எனவே, அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதனை, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.

முறைசார் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு புடவியின் அளவுக்கும் அறிவியல் புலங்களுக்குமான உறவின் வரைபடம்.[7]: Vol.1, Chaps.1,2,&3.

தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.[8][a] என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை இபின் அல் ஹய்தம் அவர்களால் அவரது ஒளியியல் நூலில் வறையறுக்கப்பட்டது.[9][10][11][12][13] பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.[14]

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்டத்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்காலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம் எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.[15][16]

வரலாறு

தொகு

முதன்மைக் கட்டுரை:அறிவியலின் வரலாறு

பரந்த பொருளில் அறிவியல் புத்தியல் ஊழிக்கு முன்பே பல வரலாற்று நாகரிகங்கள் நிலவியது.[b] புத்தியல் அறிவியல் தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் அணுகுமுறையில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.[17]

தொல்பழங்காலம்

தொகு
 
மக்காச்சோளம், ஆங்கிலம் பேசும் நாடுகளில் கூலமாக அறியப்பட்டிருந்தது. இது உள்ளூர் மக்களால் பெருமணிகள் அமைந்த தாவரமாக மெசபடோமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்றின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தன.

இடைக்கால அறிவியல்

தொகு
 
De potentiis anime sensitive, Gregor Reisch (1504) Margarita philosophica. இடைக்கால அறிவியல் நம் பொதுப்புலனின் இருப்பு மையமாக மூளையின் நாளம் ஒன்றைக் கூறியுள்ளது.,[18] மேலும் இங்கு தான் நம் புலன் அமைப்புகள் வழி வடிவம் பற்றிய கோட்பாடு தோன்றுவதாகவும் கூறியுள்ளது.
 
இபின் அல் ஹய்தம் (அல்காசென்), 965–1039 பாசுரா, பய்யிது பேரரசு. இந்த முசுலிம் அறிஞர் தான் புத்தியல் அறிவியல் முறையியலின் தந்தையாக்க் கருதப்படுகிறார். ஏனெனில், இவர் தன் முதன்முதலில் செய்முறை வழி பெறப்படும் தரவுகள்பற்றியும் அம்முடிவுகளின் மீள்நிகழ்திறம் பற்றியும் வற்புறுத்தியுள்ளார்.[19][c]

மறுமலர்ச்சியும் தொடக்கப் புத்தியல்பு அறிவியலும்

தொகு
 
கலென் (கி.பி 129– 216) ஒளியியல் சியாசம் X-வடிவம் உடையதாக்க் குறிப்பிடுகிறார். (வெசாலியசுவின் பொறிப்பில் இருந்து, 1543)
 
கலீலியோ கலிலி, புத்தறிவியலின் தந்தை.[20]: Vol. 24, No. 1, p. 36

அறிவொளிக்காலம்

தொகு

19 ஆம் நூற்றாண்டு

தொகு

20 ஆம் நூற்றாண்டும் அதற்கப்பாலும்

தொகு

கணிதவியலும் முறைசார் அறிவியலும்

தொகு

அறிவியல் வழிமுறை

தொகு

அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

அறிவியல் முறை மீள்நிகழ்திற வழியில் இயற்கையின் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு முயல்கிறது.[d] ஒரு விளக்கச் சிந்தனைச் செய்முறை அல்லது கருதுகோள் ஒக்காம் அலகு நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு விளக்கமாக முன்வைக்கப்படும். இது பொதுவாக அந்நிகழ்வுக்கான பிற ஏற்புடைய உண்மைகளோடு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.[21] இந்தப் புது விளக்கத்தைப் பயன்படுத்திச் செய்முற்யைலோ நோக்கீட்டாலோ நிறுவ முடிந்த பொய்ப்பிக்கும் முன்கணிப்புகளை உருவாக்கலாம்.இந்த முன்கணிப்புகளை நிறுவும் செய்முறைகளையோ அல்லது நோக்கீடுகளையோ தேடும் முன்பே, வேறு திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை என்பதை மெய்ப்பிக்க, வெளியிடவேண்டும். முன்கணிப்பின் மெய்ப்பிக்க இயலாமை ஆய்வு நன்றாக முன்னேறுகிறது என்பதற்குச் சான்றாக அமையும்.[e][f] இது இயற்கை நிகழ்வை நோக்குவதன் வழியிலும் இயற்கை நிகழ்வுகளைக் கட்டுபடுத்திய நிலைமைகளின் கீழ் ஆய்வுப்புலத்துக்கு தகுந்தபடி ஒப்புருவாக்கம் செய்யும் செய்முறைகளின் வழியிலும் (வானியல், புவியியல் போன்ற நோக்கீட்டு அறிவியல் புலங்களில், கட்டுபடுத்திய செய்முறைகளின் இடத்தை முன்கணிப்பு நோக்கீடு பகிர்கிறது). உண்மையினை அடைகிறது. மேலும், முதல்-விளைவு (காரணக் காரிய) உறவை நிறுவவும், ஒப்புறவுப் பிழையைத் தவிர்க்கவும் அறிவியல் நிறுவலுக்கு செய்முறை மிகவும் இன்றியமையாததாகும்]]). ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.[22] கருதுகோள் ஓர்வில் (சோதிப்பில்) வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும்.[23]

கருதுகோள்களை நிறுவிட செய்முறைகளை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒரு விளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும்.[24][25][26][27] செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும்.[28] அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.[29]

அறிவியல் ஆராய்ச்சிகளினால் தோன்றிய நடைமுறை விளைவுகள்

தொகு

அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றி அமைக்க இயலும். உதாரணமாக:

ஆராய்ச்சி விளைவுகள்
நிலை மின்சாரம் மற்றும் காந்தவியல் (c. 1600)
மின்னோட்டம் (18ஆம் நூற்றாண்டு)
அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன மின்னியல், மின்விளக்கு, தொலைக்காட்சி, மின்சார வெப்பமியக்கி, மண்டைஒட்டு காந்த தூண்டுதல், ஆழ் மூளை தூண்டுதல், காந்த நாடா, ஒலிபெருக்கி, திசைகாட்டி மற்றும் இடிதாங்கி உட்பட.
ஒளியின் விளிம்பு விளைவு (1665) ஒளியியல், ஆதலினால் ஒளியிழை (1840s), நவீன நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள், கேபிள் டிவி மற்றும் இணையம்
ஜெர்ம் கோட்பாடு (1700) சுகாதாரம், தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது; பிறபொருளெதிரி, நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் இலக்கு சிகிச்சைகள், புற்றுநோய் வரும்முன் அகற்று சிகிச்சைகள்.
தடுப்பு மருந்தேற்றம் (1798) வளர்ந்தநாடுகளிலிருந்து அதிகளவில் தொற்றுநோய்களை நீக்க வழிவகுத்தது, மேலும் உலகளவில் சின்னம்மை நோயை நீக்கயது.
ஒளிமின்னழுத்த விளைவு (1839) சூரிய மின்கலம் (1883), இதிலிருந்து சூரிய மின் ஆற்றல், சூரிய சக்தியினால் இயங்கும் கைக்கடிகாரம், கணிப்பான்கள் மற்றும் பிற சாதனங்கள்.
புதனின் விசித்திர சுற்றுப்பாதை (1859) மற்றும் வேறு ஆராய்ச்சிகள்
சிறப்புச் சார்புக் கோட்பாடு (1905) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடுகளுக்கு (1916) வழிவகுத்தது
செயற்கைகோள் சார்ந்த தொழில்நுட்பங்களான புவியிடங்காட்டி (1973), செய்மதி இடஞ்சுட்டல் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்[g]
வானொலி அலைகள் (1887) வானொலியானது நன்கறிந்த டெலிபோனி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் பொழுதுபோக்குகளில் மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள் அவசர சேவை, ரேடார் (கடற்பயணம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு), மருத்துவம், வானியல், கம்பியற்ற தகவல்தொடர்பு, புவி இயற்பியல், மற்றும் பிணையம். மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட நுண்ணலைகளை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.
கதிரியக்கம் (1896) மற்றும் எதிர்ப் பொருள் (1932) புற்றுநோய் சிகிச்சை (1896), கதிரியக்கக் காலமதிப்பீடு (1905), அணுக்கரு உலைகள் (1942) and அணு ஆயுதம் (1945), சுரங்க பொறியியல், பெட் வரைவி (1961), மற்றும் மருத்துவ ஆராய்ச்சி
எக்சு-கதிர் (1896) மருத்துவப் படிமவியல், சிடி வரைவி உட்பட
படிகவியல் மற்றும் குவாண்டம் இயங்கியல் (1900) குறைக்கடத்திக் கருவிகள் (1906), இதிலிருந்து நவீன கணித்தல் மற்றும் கம்பியற்ற கருவிகளுடன் ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு உட்பட – செல்லிடத் தொலைபேசி, [g] எல்.இ.டி விளக்குகள் மற்றும் சீரொளிகள்.
நெகிழி (1907) பேக்கலைட்டு களில் ஆரம்பித்து, பல விதமான செயற்கை பாலிமர்கள் பலவிதமான தொழிற்சாலை மற்றும் தினசரி பயன்பாடுகளில் உள்ளது
நுண்ணுயிர் எதிர்ப்பி (1880s, 1928) சல்வார்சன், பென்சிலின், டாக்ஸிக்ளைன்.
அணு காந்த அதிர்வு (1930s) அணு காந்த அதிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி (1946), காந்த அதிர்வு இமேஜிங் (1971), இயங்ககூடிய காந்த அதிர்வு இமேஜிங் (1990s).

அறிவியல் குமுகம்

தொகு

அறிவியலின் கிளைப்பிரிவுகளும் புலங்களும்

தொகு

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
 1. Isaac Newton's Philosophiae Naturalis Principia Mathematica (1687), for example, is translated "Mathematical Principles of Natural Philosophy", and reflects the then-current use of the words "natural philosophy", akin to "systematic study of nature"
 2. "The historian ... requires a very broad definition of "science" — one that ... will help us to understand the modern scientific enterprise. We need to be broad and inclusive, rather than narrow and exclusive ... and we should expect that the farther back we go [in time] the broader we will need to be." — David Pingree (1992), "Hellenophilia versus the History of Science" Isis 83 554–63, as cited in (Lindberg 2007, p. 3), The beginnings of Western science: the European Scientific tradition in philosophical, religious, and institutional context, Second ed. Chicago: Univ. of Chicago Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-48205-7
 3. Tracey Tokuhama-Espinosa (2010). Mind, Brain, and Education Science: A Comprehensive Guide to the New Brain-Based Teaching. W. W. Norton & Company. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-70607-9. Alhazen (or Al-Haytham; 965–1039 C.E.) was perhaps one of the greatest physicists of all times and a product of the Islamic Golden Age or Islamic Renaissance (7th–13th centuries). He made significant contributions to anatomy, astronomy, engineering, mathematics, medicine, ophthalmology, philosophy, physics, psychology, and visual perception and is primarily attributed as the inventor of the scientific method, for which author Bradley Steffens (2006) describes him as the "first scientist".
 4. di Francia 1976, ப. 13: "The amazing point is that for the first time since the discovery of mathematics, a method has been introduced, the results of which have an intersubjective value!" (Author's punctuation)
 5. di Francia 1976, ப. 4–5: "One learns in a laboratory; one learns how to make experiments only by experimenting, and one learns how to work with his hands only by using them. The first and fundamental form of experimentation in physics is to teach young people to work with their hands. Then they should be taken into a laboratory and taught to work with measuring instruments — each student carrying out real experiments in physics. This form of teaching is indispensable and cannot be read in a book."
 6. Fara 2009, ப. 204: "Whatever their discipline, scientists claimed to share a common scientific method that ... distinguished them from non-scientists."
 7. 7.0 7.1 Evicting Einstein, March 26, 2004, நாசா. "Both [relativity and quantum mechanics] are extremely successful. The Global Positioning System (GPS), for instance, wouldn't be possible without the theory of relativity. Computers, telecommunications, and the Internet, meanwhile, are spin-offs of quantum mechanics."

மேற்கோள்கள்

தொகு
 1. Created from PDB 1D65 பரணிடப்பட்டது 2008-09-28 at the வந்தவழி இயந்திரம்
 2. "science". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் September 20, 2014.
 3. "science". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster, Inc. அணுகப்பட்டது October 16, 2011. “3 அ: அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் ஆ: புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.” 
 4. "அறிவியல்". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Retrieved July 12, 2016.
 5. Editorial Staff (March 7, 2008). "The Branches of Science". South Carolina State University. பார்க்கப்பட்ட நாள் October 28, 2014.
 6. Editorial Staff (March 7, 2008). "Scientific Method: Relationships among Scientific Paradigms". Seed Magazine. Archived from the original on செப்டம்பர் 29, 2007. பார்க்கப்பட்ட நாள் September 12, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 7. Feynman, Richard. The Feynman Lectures on Physics. Vol. 1.
 8. Lindberg 2007, ப. 3.
 9. Haq, Syed (2009). "Science in Islam". Oxford Dictionary of the Middle Ages. ISSN 1703-7603. Retrieved 2014-10-22.
 10. G. J. Toomer. Review on JSTOR, Toomer's 1964 review of Matthias Schramm (1963) Ibn Al-Haythams Weg Zur Physik Toomer p.464: "Schramm sums up [Ibn Al-Haytham's] achievement in the development of scientific method."
 11. "International Year of Light - Ibn Al-Haytham and the Legacy of Arabic Optics". Archived from the original on 2014-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-24.
 12. Al-Khalili, Jim (4 January 2009). "The 'first true scientist'". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/7810846.stm. பார்த்த நாள்: 24 September 2013. 
 13. Gorini, Rosanna (October 2003). "Al-Haytham the man of experience. First steps in the science of vision" (PDF). Journal of the International Society for the History of Islamic Medicine 2 (4): 53–55. http://www.ishim.net/ishimj/4/10.pdf. பார்த்த நாள்: 2008-09-25. 
 14. Science and Islam, Jim Al-Khalili. பிபிசி, 2009
 15. Cahan, David, ed. (2003). From Natural Philosophy to the Sciences: Writing the History of Nineteenth-Century Science. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-08928-2.
 16. The Oxford English Dictionary dates the origin of the word "scientist" to 1834.
 17. Heilbron 2003, ப. vii
 18. * Smith, A. Mark (June 2004), "What is the History of Medieval Optics Really About?", Proceedings of the American Philosophical Society, 148 (2): 180–194, JSTOR 1558283:p.189
 19. Jim Al-Khalili (January 4, 2009). "The 'first true scientist'". BBC News.
 20. "Galileo and the Birth of Modern Science". American Heritage of Invention and Technology 24. 
 21. Wilson, Edward (1999). Consilience: The Unity of Knowledge. New York: Vintage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-76867-X. {{cite book}}: Invalid |ref=harv (help)
 22. Nola & Irzik 2005, ப. 208.
 23. Nola & Irzik 2005, ப. 199–201.
 24. van Gelder, Tim (1999). ""Heads I win, tails you lose": A Foray Into the Psychology of Philosophy" (PDF). University of Melbourne. Archived from the original (PDF) on April 9, 2008. பார்க்கப்பட்ட நாள் March 28, 2008.
 25. Pease, Craig (September 6, 2006). "Chapter 23. Deliberate bias: Conflict creates bad science". Science for Business, Law and Journalism. Vermont Law School. Archived from the original on June 19, 2010.
 26. Shatz, David (2004). Peer Review: A Critical Inquiry. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7425-1434-X. இணையக் கணினி நூலக மைய எண் 54989960.
 27. Krimsky, Sheldon (2003). Science in the Private Interest: Has the Lure of Profits Corrupted the Virtue of Biomedical Research. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7425-1479-X. இணையக் கணினி நூலக மைய எண் 185926306.
 28. Bulger, Ruth Ellen; Heitman, Elizabeth; Reiser, Stanley Joel (2002). The Ethical Dimensions of the Biological and Health Sciences (2nd ed.). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-00886-7. இணையக் கணினி நூலக மைய எண் 47791316.
 29. Backer, Patricia Ryaby (October 29, 2004). "What is the scientific method?". San Jose State University. Archived from the original on April 8, 2008. பார்க்கப்பட்ட நாள் March 28, 2008.

மேலும் படிக்க

தொகு

அறிவியல், அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

அறிவியல் முறை,அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

அறிவியலின் முறையியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி ஒன்று. இதழ் 3, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.

அறிவியலின் வரலாறெழுதியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி 9, இதழ்கள் 33-36, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.

வெளி இணைப்புகள்

தொகு

வெளியீடுகள்

தொகு

தகவல் வாயில்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்&oldid=4021150" இலிருந்து மீள்விக்கப்பட்டது