கதிரியக்கக் காலமதிப்பீடு
கதிரியக்கக் காலமதிப்பீடு (radiometric dating, அல்லது radioactive dating) என்பது ஒரு பொருளின் வயதைக் கண்டறியும் ஒரு வழிமுறையாகும். இயற்கையில் தோன்றும் கதிரியக்க ஓரிடத்தனிமத்தின் அளவையும் அத்தனிமத்தின் சிதைவினால் உருவான விளைபொருட்களின் அளவையும் இம்முறை ஒப்பிடுகிறது. நன்கு அறியப்பட்ட உட்கரு சிதைவு வீதங்களை[2] இம்முறை பயன்படுத்திக் கொள்கிறது.
பாறைகளின் வயது மற்றும் புவியியல் தோற்றங்கள் மட்டுமல்ல புவியின் வயதையும்கூட நிர்ணயம் செய்வதற்கு இம்முறையே முதன்மையானதாக உள்ளது. இயற்கையாக மற்றும் செயற்கையாகத் தோன்றிய பரவலான எல்லாப் பொருட்களின் வயதையும் இம்முறையைப் பயன்படுத்தி அறியலாம். தொல்லுயிர்ப் புதைப் படிவுகள் காணப்பட்ட அசலான இடத்திலிருக்கும் பாறைகள் மற்றும் பாறைகளுக்கு கீழும் மேலுமாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி தொல்லுயிர்ப் புதைப்படிவுகளின் வயதைக் கண்டறியலாம். கலைப்படைப்புகள் உள்ளிட்ட தொல்லியல்சார் பொருட்களின் வயதும் இம்முறையிலேயே காணப்படுகிறது.
புவி வரலாற்றுக் கால அளவை உருவாக்குவதிலும் இம்முறை பெரும்பங்கு வகிக்கிறது. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு, யுரேனியம்-ஈயம் காலக்கணிப்பு என்பன அவற்றுள் நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப முறைகளாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ales stenar". The Swedish National Heritage Board. 11 October 2006. Archived from the original on 31 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 9 March 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ International Union of Pure and Applied Chemistry. Radioactive dating. Compendium of chemical terminology, internet edition. [1]
- ↑ McRae A. 1998. Radiometric dating and the geological time scale: circular reasoning or reliable tools? Radiometric dating and the geological time scale. TalkOrigins Archive