'கலென் (ஆங்கிலம்|Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு ஒரு கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது கோட்பாடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய மருத்துவ அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ உடற்கூற்றியல் தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், அன்ட்ரியாசு வெசேலியசு என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன.[1][2][3]

குளோட் கலியென். 1865ல், பியரே ரோச் விக்னேரன் என்பவரால் வரையப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Since no contemporary depictions or descriptions of Galen are known to have existed, later artists' impressions are unlikely to have reproduced his appearance accurately.
  2. S. Alexandru (2021). "Critical Remarks on Codices in which Galen Appears as a Member of the gens Claudia". Mnemosyne 74 (4): 553–597. doi:10.1163/1568525x-12342720. 
  3. "Galen" entry in Collins English Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலென்&oldid=4165067" இலிருந்து மீள்விக்கப்பட்டது