இரும்பு பெண்டா ஐதரைடு

வேதிச் சேர்மம்

இரும்பு பெண்டா ஐதரைடு (Iron pentahydride) FeH5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உயர் அழுத்த நிலைகளில் இது நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. அணுநிலை ஐதரசன் இச்சேர்மத்தில் சிறிய மூலக்கூற்று கொத்துகளுடன் பிணையாமல் இருப்பதால் ஒரு மீக்கடத்தியாக இது முகியமான சேர்மமாகப் பார்க்கப்படுகிறது. இரும்பு பெண்டா ஐதரைடில் ஓரிணை ஐதரசன் அணுக்கள் இவ்வாறு பிணைப்பில் இல்லாமல் உள்ளன.

தயாரிப்பு

தொகு

130 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் ஐத்ரசனுடன் இரும்புச் செதில் சேர்க்கப்பட்டு 1500 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழே சூடாக்கப்பட்டால் இரும்பு பெண்டா ஐதரைடு உருவாகிறது.[1] அழுத்தத்தை 66 கிகாபாசுக்கல் அளவுக்கு குறைத்தால் திண்ம FeH3 உருவாகும்.

I4/mmm என்ற சமச்சீர் ஒழுங்குடன் நாற்கோணகப் படிகத் திட்டத்தில் இதன் அலகு கூடுகள் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Pépin, C. M.; Geneste, G.; Dewaele, A.; Mezouar, M.; Loubeyre, P. (28 July 2017). "Synthesis of FeH5: A layered structure with atomic hydrogen slabs" (in en). Science 357 (6349): 382–385. doi:10.1126/science.aan0961. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:28751605. Bibcode: 2017Sci...357..382P. 
  2. "Synthesis of FeH5 under pressure: Dense atomic metal hydrogen stabilised with Fe" (in en). Spotlight on Science (European Synchrotron Radiation Facility). 27 July 2017. https://www.esrf.eu/home/news/spotlight/content-news/spotlight/spotlight294.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_பெண்டா_ஐதரைடு&oldid=3385380" இலிருந்து மீள்விக்கப்பட்டது