இரெகுலபள்ளி பூபதி ரெட்டி

இந்திய அரசியல்வாதி

இரெகுலபள்ளி பூபதி ரெட்டி (Rekulapally Bhoopathi Reddy) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். நிசாமாபாத்து மாவட்டத்தில் உள்ள நிசாமாபாத்து கிராமப்புற சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

நிசாமாபாத்து நகரம் இரெகுலப்பள்ளி இராசா ரெட்டிக்கு மகனாக இரெகுலபள்ளி பூபதி ரெட்டி பிறந்தார். 1993 ஆம் ஆண்டில் விச்சயவாடாவில் உள்ள என். டி. ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் உசுமானியா மருத்துவக் கல்லூரி எலும்பியல் துறையில் முதுநிலை மருத்துவம் படித்து முடித்தார்.[3]

தொழில்

தொகு

நிசாமாபாத்து கிராமப்புற சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். 78,378 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பாரத் இராசுட்டிர சமிதி கட்சியின் பாச்சிரெட்டி கோவர்தனை 21,963 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5][6] முன்னதாக 2018 தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில், இவர் தெலுங்கானா இராசுட்டிர சமிதி கோவர்தனிடம் தோல்வியடைந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nizamabad (Rural) assembly election results 2023: Nizamabad (Rural) Winning Candidates List and Vote Share". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  2. "Nizamabad Rural Assembly Election Results 2023: Nizamabad Rural Telangana Election Schedule, Vote share and Results". Financialexpress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  3. "Bhoopathi Reddy Rekulapally(Indian National Congress(INC)):Constituency- NIZAMABAD (RURAL)(NIZAMABAD) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  4. 4.0 4.1 "Nizamabad (Rural) Constituency Election Results 2023: Nizamabad (Rural) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  5. english. "bhoopathi reddy rekulapally telangana bhoopathi-reddy-rekulapally-nizamabad-rural candidate Profile,Candidates Net Worth, Education News | ABPLive". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  6. "Bhoopathi Reddy Rekulapally, INC Candidate from Nizamabad Rural Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.