இரெபேக்கா ஓப்பன்கீமர்

இரெபேக்கா ஓப்பன்கீமர் ( Rebecca Oppenheimer) (பிறப்பு பெயர்: பென் ஆர். ஓப்பன்கீமர்)[1] ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் மன்ஹாட்டன்க்கு உயர்மேற்கே அமைந்துள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் வானியற்பியல் துறையின் காப்பாளர்கள் மூவரில் ஒருவர் ஆவார். இவர் ஒரு புறவெளிக்கோள் அறிவியலாளரும் ஆவார்.[2] இவர் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் அமைந்த விண்மீன்கலைச் சுற்றிவரும் கோள்படிமங்களை கண்டுபிடிப்பதற்கான புதிய கருவிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். இதன் அறுதி குறிக்கோள் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் புறவெளியில் அமையும் உயிரின வாழ்விடங்களைக் கண்டறிவதே ஆகும்.[3]

இரெபேக்கா ஓப்பன்கீமர்
Rebecca Oppenheimer
வாழிடம்அமெரிக்க ஒன்றிய நாடுகள்
துறைவேதியியல், பொருள்களின் அறிவியல்
பணியிடங்கள்பெர்க்கேலி கொலராடோ பல்கலைக்கழகம்
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
கல்விகொரேசு மான் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவதுவானியற்பியல்

இளமையும் கல்வியும்

தொகு

ஓப்பன்கீமர் பிராங்சில் இருந்த ஒரேசு மன் பள்ளியில் படித்தார். இவர் 1990 இல் பள்ளிப்படிப்பு முடித்ததும், இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த் ஐ. ஐ. இராபி அறிவியல் அறிஞராக கல்வி பயின்றார். இவர் 1994 இல் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1999 இல் முனைவர் பட்ட்த்தை வானியற்பியலில் கலிபோர்னியா தொழில்நுட்பக் நிறுவனத்தில் பெற்றார். அடுத்த இர்ண்டு ஆண்டுகள் கலிபோனியா பலகலைக்கழகத்திலேயே அபுள் விண்வெளித் தொலைநோக்கி ஆய்வுநல்கை பெற்று காலங்கழித்தார்.

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் கொலம்பியா பல்கலைக்கழக வானியல் துறையின் கூடுதல் பேராசிரியர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி, மக்கள் அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் முதல் பழுப்புக் குறுமீன் கிளிசே 229B யின் இணைக்கண்டுபிடிப்பாளர் ஆவார்.[4][5] இவர் புற்வெளிக் கோள்களிலும்[6] பழுப்புக் குறுமீன்களிலும்[7] தகவமைவு ஒளியியலிலும் வான்பொருள் ஒளிமுகட்டியலிலும் முனைவான ஆய்வை மேற்கொள்கிறார்.[8] ஓப்பன்கீமர் நாசாவிலும்,[9] தேசிய அறிவியல் அறக்கட்டலையிலும் அமெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்றத்திலும் பல குழுக்களைல் உள்ளார். இவர் புறவெளிக்கோள் படம்பிடிக்கும் திட்டம் 1640 இன் முதன்மை ஆய்வாளர் ஆய்வாளர் ஆவார்.

இவர் 2001 இல் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆய்வைத் தொடர நியூயார்க் நகருக்குத் திரும்பிவந்தார். இங்கு இவர் 2004 இல் புல உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் பொதுமக்களுக்கும் தொழில்முறை அறிஞருக்கும் வானியல் ஆராய்ச்சிம் குறித்து விரிவுரைகள் நிகழ்த்துகிறார்.

தகைமைகளும் விருதுகளும்

தொகு
  • 2009: இளம் அறிவியலாளருக்கான பிளாவத்னிக் விருது[10] நியூயர்க் அறிவியல் கல்விக்கழகம்
  • 2003: கார்டெல் நினைவு விரிவுரை, கார்டெல் வான்காணகம், வெல்லிங்டன், நியூசிலாந்து
  • 2002-2004: அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கால்புபிளைசுச் ஆராய்ச்சி நல்கை
  • 2002: தேசிய அறிவியல் கல்விக்கட்டளை, பெக்மன் அறிவியல் முன்னணியின் அழைப்புப் பங்கேற்பாளர்
  • 1999-2002: அபுள் முதுமுனைவர் ஆய்வு நல்கை[11][12] (பென் ஓப்பன்கீமர் எனப் பட்டியலில் சேர்த்தல்)
  • 1994-1997: தேசிய அறிவியல் அறக்கட்டளை, பட்டமேற்படிப்பு ஆய்வு நல்கை[13]
  • 1990-1994: ஐ. ஐ. இராபி அறிவியல் அறிஞர்[14] கொலம்பியா பல்கலைக்கழகம்
  • 1990: வெசுட்டிங்கவுசு அறிவியல் போட்டி, தகைமை அறிவிப்பு
  • 1989: நியூயார்க் அறிவியல் கல்விக்கழகம், அறிவியல் எழுத்துப் போட்டி, முதல் இடம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rebecca Oppenheimer CV" (PDF). American Museum of Natural History. p. 2. Archived from the original (PDF) on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Exoplanetology" (in en). Wikipedia. 2017-06-08. https://en.wikipedia.org/w/index.php?title=Exoplanetology&oldid=784488738. 
  3. "Rebecca Oppenheimer". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
  4. Nakajima, T.; et al. (1995-11-20). "Discovery of a cool brown dwarf". Nature Publishing Group. பார்க்கப்பட்ட நாள் 2006-12-12.
  5. Oppenheimer, B. R.; et al. (1995-12-01). "Infrared Spectrum of the Cool Brown Dwarf Gl 229B". Science Magazine. பார்க்கப்பட்ட நாள் 2006-12-12.
  6. "The Lyot Project Website". January 2004.
  7. "White Dwarfs by the Billions". May 2001. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
  8. Overbye, Dennis (2004-06-22). "Grasping for Light of Distant Worlds". New York Times.
  9. "Terrestrial Planet Finder Science and Technology Definition Team". March 2005. Archived from the original on 2011-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. "The Blavatnik Awards for Young Scientists | The New York Academy of Sciences". nyas. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
  11. "Listing of all Hubble Fellows 1990-2017". www.stsci.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2017-02-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
  12. "Hubble Fellowships". www.stsci.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Home - NSF Graduate Research Fellowships Program (GRFP)". www.nsfgrfp.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
  14. "I.I. Rabi Scholars Program | Columbia College". www.college.columbia.edu. Archived from the original on 2017-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெபேக்கா_ஓப்பன்கீமர்&oldid=3986493" இலிருந்து மீள்விக்கப்பட்டது