இரேனியம் மூவாக்சைடு புளோரைடு

வேதிச் சேர்மம்

இரேனியம் மூவாக்சைடு புளோரைடு (Rhenium trioxide fluoride) என்பது ReO3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தூய்மையற்ற மாதிரிகள் நிறத்தில் தோன்றினாலும், இக்கனிமம் வெள்ளையாகக் காணப்படுகிறது. பதங்கமாகும் பண்பும் காந்தவியல் பண்பும் கொண்டு திண்மநிலையில் உள்ளது. இரேனியத்தின் சில ஆக்சிபுளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று இரேனியம் ஈராக்சைடு முப்புளோரைடு ReO2F3 மற்றொரு முக்கியமான சேர்மமாகும். இச்சேர்மத்திற்கான பயன்பாடுகள் இல்லை என்றாலும் இது ஒரு மூவாக்சைடு புளோரைடு சேர்மத்திற்கு ஓர் அரிய உதாரணமாகும். மேலும் இது ஒரு சில கல்வி ஆராய்ச்சி ஆர்வத்தை கொண்டுள்ளது.

இரேனியம் மூவாக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள்
42246-24-2
InChI
  • InChI=1S/FH.3O.Re/h1H;;;;/q;;;;+1/p-1
    Key: YDGWOHYNESLUAQ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Re](=O)(=O)F
பண்புகள்
FO3Re
வாய்ப்பாட்டு எடை 253.20 g·mol−1
தோற்றம் வெண்மை
அடர்த்தி 6.042 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இரேனியம் மூவாக்சைடு சேர்மத்தை புளோரினேற்றம் செய்து இரேனியம் மூவாக்சைடு புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[1]

2 ReO3 + F2 → 2ReO3F

இலூயிசு காரங்களுடன் (L) இச்சேர்மம் ReO3FL2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கூட்டுசேர் பொருட்களை உருவாக்குகிறது. எ.கா., L = டை எத்தில் ஈதர் மற்றும் அசிட்டோநைட்ரைல் போன்றவையாகும்.[1]

கட்டமைப்பும் தொடர்புடைய சேர்மங்களும்

தொகு

எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளின்படி, இச்சேர்மம் இரண்டு புளோரைடு மற்றும் இரண்டு ஆக்சைடு பால ஈந்தணைவிகளால் இணைக்கப்பட்ட எண்முக மறு மையங்களைக் கொண்ட ஒரு திருகுசுழல் சங்கிலி அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. ReO3F சேர்மத்திற்கு மாறாக, TcO3F மற்றும் MnO3F ஆகிய சேர்மங்கள் எளிமையான கட்டமைப்புகளுடன் படிகமாகின்றன. மாங்கனீசு சேர்மம் ஒரு நான்முகி ஒருமமாக படிகமாகிறது. தெக்கினீசியம் சேர்மமான TcO3F புளோரைடு பாலங்களுடன் இருமங்களாகப் படிகமாகிறது.[2] இரேனியம் மூவாக்சைடு புளோரைடின் கட்டமைப்போடு முரண்படுவது இரேனியம் மூவாக்சைடு குளோரைடு ஆகும். இது ஒரு ஒருமமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Supeł, Joanna; Marx, Rupert; Seppelt, Konrad (2005). "Preparation and Structure of Rhenium Fluoride Trioxide ReO3F, and the Polymorphism of Rhenium Trifluoride Dioxide, ReO2F3". Zeitschrift für anorganische und allgemeine Chemie 631 (15): 2979–2986. doi:10.1002/zaac.200500239. 
  2. Supeł, Joanna; Abram, Ulrich; Hagenbach, Adelheid; Seppelt, Konrad (2007). "Technetium Fluoride Trioxide, TcO3F, Preparation and Properties". Inorganic Chemistry 46 (14): 5591–5595. doi:10.1021/ic070333y. பப்மெட்:17547395.