இரோபூமி யமாசிட்டா

சப்பானிய சுற்றுச்சூழல் ஆர்வலர்

இரோபூமி யமாசிட்டா (Hirofumi Yamashita) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு மீனியல் நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராவார். இரோபூமி யமாசிட்டா மீன்களைப் பற்றிய அறிவியலைப் படித்தார். அரியாக் கடல் மீன்வள பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்த பின்னர் மாசு பிரச்சினைகள் குறித்து ஒரு பிராந்திய தொழிலாளர் அமைப்பாளராக உருவானார். கியுசூ தீவில் அமைந்துள்ள ஈசாயா விரிகுடா சப்பான் நாட்டிலுள்ள மிகப்பெரிய தட்டை நிலங்களில் ஒன்றாகும். பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் இவ்விரிகுடாவை தங்குமிடமாக பயன்படுத்துகின்றன. ,

இரோபூமி யமாசிட்டா
Hirofumi Yamashita
பிறப்பு1934-02-19
இறப்பு2000-07-21
தேசியம்சப்பானியர்
துறை
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (1998)

உலகின் வளமான ஈரநிலங்களில் ஒன்றான ஈசாயா விரிகுடாவின் மீட்புக்காக இரோபூமி யமாசிட்ட்டா பல ஆண்டுகள் போராடினார். கடல் பாதுகாப்பு குறித்த முயற்சிகளுக்காக யமாசிட்டாவிற்கு 1998 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]

யமாசிட்டா 2000 ஆம் ஆண்டில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. Goldman Environmental Prize: Hirofumi Yamashita பரணிடப்பட்டது 7 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 27, 2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோபூமி_யமாசிட்டா&oldid=3860739" இலிருந்து மீள்விக்கப்பட்டது