இறச்சகுளம் மகாதேவர் கோயில்

மகாதேவர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ளது.

பூதப்பாண்டியிலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் பழையாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அருகில் ஜடாயுபுரத்தில் ஜடாதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கருவறையில் சிவபெருமான் காட்சி தருகிறார். கோயிலின் வடக்குப் பக்கம் சிறிய பாறை வடிவில் சாஸ்தா அமைக்கப்பட்டுள்ளார். [1] இங்குள்ள சிவன் மகாதேவர் அல்லது உதயமார்த்தாண்டேசுவரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் உள்ள அம்மன் சிவகாமியம்மை ஆவார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
  2. "Pazhayar (Kottaru) river siva Temples - பழையாற்றங்கரை (கோட்டாறு) திருக்கோயில்கள்". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.