இறச்சகுளம்
இறச்சகுளம் (ஆங்கில மொழி: Erachakulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]
இறச்சகுளம் Erachakulam | |
---|---|
ஆள்கூறுகள்: 8°13′45″N 77°25′50″E / 8.229100°N 77.430600°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 55 m (180 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 902 |
தொலைபேசிக் குறியீடு | +914652xxxxxx |
வாகனப் பதிவு | TN-74 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, புத்தேரி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி |
மாநகராட்சி | நாகர்கோவில் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | விஜய் வசந்த் |
இணையதளம் | https://kanniyakumari.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இறச்சகுளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°13′45″N 77°25′50″E / 8.229100°N 77.430600°E (அதாவது, 8°13'44.8"N, 77°25'50.2"E) ஆகும். நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, புத்தேரி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி ஆகியவை இறச்சகுளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
இறச்சகுளம் பகுதியில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் ஓர் அலகான அமிர்தா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.[4] இறச்சகுளம் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள், அப்பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள இயலாக் குழந்தைகளின் நலனுக்காக மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[5]
இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[6] மேலும், உதய மார்த்தாண்டேஸ்வரர் கோயில், முப்பிடாதியம்மன் கோயில், அழகிய மன்னார்சாமி கோயில் ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Palanithurai, G.; Ragupathy, Varadarajan (2006). Functional Efficiency of Gram Sabha in Tamil Nadu (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-254-3.
- ↑ India. Director of Census Operations, Tamil Nadu (1972). District Census Handbook. Series 19: Tamil Nadu: Kanyakumari (in ஆங்கிலம்).
- ↑ Madras (India : State) (1964). Fort Saint George Gazette (in ஆங்கிலம்).
- ↑ "Amrita Institutions". www.amrita.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ மாலை மலர் (2023-01-27). "இயலாக் குழந்தைகளின் நலன் காக்க சிறப்பு மருத்துவ முகாம்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ "Arulmigu Sandhanamariamman Temple, Pechankulam, Erachakulam - 629902, Kanyakumari District [TM042089].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.