புத்தேரி
புத்தேரி (ஆங்கில மொழி: Putheri) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] காலஞ்சென்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மனைவி புத்தேரி ஊரைச் சேர்ந்தவர்.[3]
புத்தேரி Putheri | |
---|---|
ஆள்கூறுகள்: 8°13′00″N 77°25′58″E / 8.216800°N 77.432900°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 49 m (161 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 001 |
தொலைபேசி குறியீடு | +914652xxxxxx |
வாகனப் பதிவு | TN-74 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, இறச்சகுளம், திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி |
மாநகராட்சி | நாகர்கோவில் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | விஜய் வசந்த் |
சட்டமன்ற உறுப்பினர் | எம். ஆர். காந்தி |
இணையதளம் | https://kanniyakumari.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 49 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புத்தேரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°13′00″N 77°25′58″E / 8.216800°N 77.432900°E (அதாவது, 8°13'00.5"N, 77°25'58.4"E) ஆகும். நாகர்கோவில், பூதப்பாண்டி, தோவாளை, இறச்சகுளம், திருப்பதிசாரம், தேரேகால்புதூர் மற்றும் வடசேரி ஆகியவை புத்தேரி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சுமார் ரூ. 21.40 கோடியில், புத்தேரியில் இரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[4]
புத்தேரியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. இதில் படகு சவாரி செய்யவும், இதன் கரையை அழகுபடுத்தி, நடைபாதை வசதிகள் ஏற்படுத்துதல், இருசக்கர வாகனங்கள் செல்ல வசதிகள் செய்தல் போன்ற சேவைகளை வழங்கி, நவீனப்படுத்தவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.[5]
புத்தேரியிலுள்ள நயினார் யோகீஸ்வரமுடையார் கோயில்,[6][7] கிருஷ்ணசுவாமி கோயில்,[8] இரவி விநாயகர் கோயில்,[9] வீரகாளியம்மன் கோயில்,[10] மற்றும் மரகத விநாயகர் கோயில்[11] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.
புத்தேரி பகுதியானது, நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் எம்.ஆர். காந்தி ஆவார். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக விஜய் வசந்த், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kisan World (in ஆங்கிலம்). Sakthi Sugars, Limited. 1994.
- ↑ மாலை மலர் (2022-10-07). "வடசேரி-புத்தேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ தினத்தந்தி (2018-07-27). காலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
- ↑ "புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி". பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
- ↑ தினத்தந்தி (2022-11-19). "புத்தேரி பெரிய குளத்தில் படகு சவாரி விட ஏற்பாடு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ "Arulmigu Nainar Yogeeswaramudaiyar Temple, Putheri - 629001, Kanyakumari District [TM038317].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
- ↑ "Yogeeswarar Temple : Yogeeswarar Yogeeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ "Arulmigu Krishnaswamy Temple, Putheri - 629001, Kanyakumari District [TM038315].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
- ↑ "Arulmigu Iravi Vinayagar Temple, Putheri, Nagercoil - 629002, Kanyakumari District [TM038450].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
- ↑ "Arulmigu Veerakaliamman Temple, Putheri - 629001, Kanyakumari District [TM041949].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
- ↑ "Arulmigu Maragatha Vinayagar Temple, Putheri - 629001, Kanyakumari District [TM041991].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.