இறீபு திமசுக்கு ஆளுநரகம்
ரிஃப் டிமாஷ்க் கவர்னரேட் (Rif Dimashq Governorate, அரபு மொழி: محافظة ريف دمشق Moḥaafaẓat Reef Demashq, அதாவது "டமாஸ்கசின் ஊரக ஆளுநரகம்") என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தென்மேற்கில் குனித்ரா, தாரா, அல்-சுவைடா (வரலாற்று கால ஹௌரன் பகுதியை உள்ளடக்கியது), வடக்கில் ஹோம்ஸ், மேற்கில் லெபனான், தெற்கில் ஜோர்தான் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.
ரிஃப் டிமாஷ்க் கவர்னரேட்
مُحافظة ريف دمشق | |
---|---|
சிரியாவில் ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (திமிஷ்கு): 33°30′N 37°00′E / 33.5°N 37°E | |
நாடு | சிரியா |
நலைநகரம் | டூமா |
மவாட்டங்கள் | 10 |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,032 km2 (6,962 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,36,000 |
• அடர்த்தி | 160/km2 (410/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-RD |
மொழிகள் | அரபு |
இந்த ஆளுநரகமானது டமாஸ்கஸ் நகர-ஆளுநரகத்தை முழுவதுமாக சூழ்ந்துள்ளது. இது 18,032 கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 2,273,074 (2004 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும். [1]
சிரிய உள்நாட்டுப் போரில் இந்த ஆளுநரகம் ஒரு முக்கிய களமாக இருந்தது.
மாவட்டங்கள்
தொகுஆளுநரகமானது பத்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களானது 37 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன. மார்கஸ் ரிஃப் திமாஷ்க் மற்றும் அல்-சபதானி மாவட்டங்களின் சில பகுதிகளிலிருந்து குட்சயா மாவட்டமானது புதியதாக உருவாக்கப்பட்ட 2009 பிப்ரவரி வரை ஒன்பது மாவட்டங்கள் இருந்தன. ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை (2004 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 2,273,074 ஆகும்.
|
* - 2009 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமானது, மார்கஸ் ரிஃப் டிமாஷ்க் மாவட்டத்தின் சிலபகுதிகளையும், அல்-சபதானி மாவட்டத்தின் சில பகுதிகளையும் சேர்த்து உருவாக்கபட்டது.