இலக்கிய வெளி (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலக்கிய வெளி எனும் நூல் 200 பக்கங்களுடன் 1/8 டெம்மி அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இலக்கிய வெளி | |
---|---|
நூல் பெயர்: | இலக்கிய வெளி |
ஆசிரியர்(கள்): | சுகதேவ் |
வகை: | தமிழ் |
துறை: | கட்டுரைகள் |
இடம்: | 226 (188), பாரதி சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014. கைபேசி:9500061608. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 200 |
பதிப்பகர்: | மருதா பதிப்பகம் |
பதிப்பு: | டிசம்பர் 2003. |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
நூலாசிரியர்
தொகுதூத்துக்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட சுகதேவ் (இயற்பெயர் ப. இளையபெருமாள்) பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றவர். தினமணி நாளிதழில் 19 ஆண்டுகள் வரை பணியாற்றினார். கடைசி ஆறு ஆண்டுகள் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பு இதழான தினமணிக் கதிர் வார இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தற்போது சென்னையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
பொருளடக்கம்
தொகுநூலாசிரியர் தினமணிக் கதிர் இதழில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்த கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவைகளில் இலக்கியம் தொடர்பான 22 கட்டுரை மற்றும் நேர்காணல்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.