இலங்கைத் திரைப்படத்துறை

(இலங்கையின் திரைப்படத்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கைத் திரைப்படத்துறை (Cinema of Sri Lanka) என்பது 1947 ஆம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். 1947 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ். எம். நாயகம் என்பவரால் கடவுனு பொறந்துவ என்ற முதலாவது சிங்கள மொழி பேசும் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[1] இலங்கைத் திரைப்படத்துறைக்கு அடித்தளம் இட்டவர் எஸ். எம். நாயகம் என்ற தமிழரே ஆவார்.

வரலாறு

தொகு

இலங்கைத் திரைப்படத்துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக தென்னிந்தியத் திரைப்படத்துறையே சார்ந்திருந்தது. இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்கள மொழித் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன.

அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்திருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன. 1956 ஆண்டுக்கு பின்னரே இலங்கையில் சிங்களத் திரைப்படத்துறை மூலம் சிங்களப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1950 இல் இலங்கையில் தமிழ்த் திரைப்படத்துறை மூலம் திரைப்படத்தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பித்தன.

சிங்களத் திரைப்படத்துறை

தொகு

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் ஜனவரி 21, 1947 இல் திரையிடப்பட்டது. கடவுனு பொறந்துவ என்ற இந்தத் திரைப்படம் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இப்படத்தைத் தயாரித்து வழங்கியவர் எஸ். எம். நாயகம். இவர் ஒரு தமிழர் ஆவார்.

இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை

தொகு

இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 1951 இல் வெளியான குசுமலதா என்ற திரைப்படம் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Savarimutthu, Ranee (1977). On the Development of Sinhala Cinema, 1947–1967. Colombo, Sri Lanka: OCIC Sri Lanka.

வெளிப்புற இணைப்புகள்

தொகு