இலங்கை மலாயர்
இலங்கை மலாயர் (Sri Lankan Malays) எனப்படுவோர் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இலங்கையின் மலாய்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டின் குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வினத்தவரின் தொகை (0.20%) 40,000 ஆகும். இலங்கையும் இந்தோனேசியாவும் டச்சு ஆதிக்கத்தில் இருந்த நேரத்தில் குடிபெயர்ந்தவர்களின் வம்சாவளியினராக உள்ளனர்.இரண்டாம் அலையாக இரு நாடுகளும் பிரித்தானியப் பேரரசின் கீழ் வந்தபோது 1796-1948 காலகட்டத்தில் மலேசியத் தீபகற்பத்திலிருந்து இடம் பெயர்ந்தனர்.
மொத்த மக்கள்தொகை | |||
---|---|---|---|
40,189 (2012 கணக்கெடுப்பு)[1] | |||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||
மாகாணம் | |||
மேல் மாகாணம் | 24,718 | ||
தென் மாகாணம் | 8,343 | ||
மத்திய மாகாணம் | 2,889 | ||
வடமேல் மாகாணம் | 1,675 | ||
மொழி(கள்) | |||
சமயங்கள் | |||
இசுலாம் (அனேகமானோர் சுன்னி) | |||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||
துவக்கத்தில் குடியேறிவர்களில் பெரும்பாலோர் ஒல்லாந்து ஆட்சியில் படைவீரர்களாக அனுப்பப் பட்டவர்களாகும். இவர்கள் பிரித்தானியர் காலத்திலும் குடியேற்ற நாட்டை நிருவகிக்க பயன்பட்டனர். மற்றவர்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள். அவர்களில் இந்தோனேசியத் தீவுகளின் பல்வேறு அரச மரபுகளைச் சேர்ந்த இளவரசர்கள் பலரும் இருந்தனர். இவர்களை இன்னமும் பிணைப்பது கலப்பு மலாயு மொழிதான். இந்த இனத்தவர்களில் சிறந்த படைவீரர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2018-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
- Directory on Sri Lanka Malays - Edition 2 - ISBN NO : 978-955-8529-01-0 Published by Sri Lanka Malay Association - டிசம்பர் 2008