இலட்சுமி இந்திரா பாண்டா

இந்தியப் பெண் புரட்சியாளர்

இலட்சுமி இந்திரா பாண்டா (Laxmi Indira Panda) ஓர் இந்தியப் புரட்சியாளர் என்று அறியப்படுகிறார்.[3][4] நேதாச்சி சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தின் இளைய உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5] ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய ஒரே ஒடியா பெண்மணி இலட்சுமி இந்திரா பாண்டா மட்டுமே.[2] என்பது இவருக்குரிய சிறப்பாகும்.

இலட்சுமி இந்திரா பாண்டா
Laxmi Indira Panda
பிறப்புஇலட்சுமி பாண்டா
1930
யங்கோன் அருகில், மியான்மர்[1]
இறப்புஅக்டோபர் 7, 2008
தேசியம்இந்தியர்
அமைப்பு(கள்)இந்தியத் தேசிய இராணுவம்
அரசியல் இயக்கம்நாடு கடந்த இந்திய அரசு
வாழ்க்கைத்
துணை
காகேசுவர் பாண்டா (1951)[2]
விருதுகள்தேசிய சுதந்திர சைனிக் விருது (2008)[1]

இலட்சுமி இந்திரா பாண்டா ஜான்சி ராணியின் படைப்பிரிவில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார், இவருக்கு 14 வயதாக இருந்தபோது, இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடினார்.[2]

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலட்சுமி இந்திரா பாண்டா இறந்த பிறகு இவரது நினைவாக செய்ப்பூரில் ஒரு சிலை நிறுவ ஒடிசா அரசு அறிவித்தது [6]

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று இவருக்கு தேசிய சுதந்திர சைனிக் சம்மான் வழங்கப்பட்டது. இவ்விருது இந்தியாவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமாகும்.[1]

இறப்பு

தொகு

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி பாண்டா, நீண்டகால நோயினால் தில்லி எய்ம்சு மருத்துவமனையில் இறந்தார்.[7] முழு அரசு மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரிசா காவல்துறை சார்பில் இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Satapathy, Rajaram (January 22, 2011). "Forgotten and neglected too". https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Forgotten-and-neglected-too/articleshow/7343980.cms. 
  2. 2.0 2.1 2.2 "Laxmi Panda : The Forgotten Soldier of a Lost Army". Orissa Review. August 2010 இம் மூலத்தில் இருந்து 2022-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221222053753/http://magazines.odisha.gov.in/Orissareview/2010/August/engpdf/29-33.pdf. 
  3. "At last, Laxmi Panda is a 'freedom fighter'". Zee News. September 28, 2008. https://zeenews.india.com/news/nation/at-last-laxmi-panda-is-a-freedom-fighter_472655.html. 
  4. "Heroes In Search Of A Plaque". Outlook India. June 6, 2005. https://www.outlookindia.com/magazine/story/heroes-in-search-of-a-plaque/227578. 
  5. "The last battle of Laxmi Panda Footsoldiers of freedom". August 15, 2007. https://www.thehindu.com/todays-paper/tp-opinion/The-last-battle-of-Laxmi-Panda-Footsoldiers-of-freedom/article14816074.ece. 
  6. 6.0 6.1 "Orissa govt announces a statue in memory of Laxmi Panda". Webindia123. October 7, 2008 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 22, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221222053752/https://news.webindia123.com/news/articles/India/20081007/1073057.html. 
  7. "Freedom fighter Laxmi Indira Panda dies". ஹிந்துஸ்தான் டைம்ஸ். October 7, 2008. https://www.hindustantimes.com/delhi-news/freedom-fighter-laxmi-indira-panda-dies/story-yUf0qGx4imz5QuTcnCFYON.html. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_இந்திரா_பாண்டா&oldid=4108368" இலிருந்து மீள்விக்கப்பட்டது