இலட்சுமி கெபால்கர்

இந்திய அரசியல்வாதி

இலட்சுமி இரவீந்திர கெபல்கர் (Lakshmi Ravindra Hebbalkar) என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இலட்சுமி கெபால்கர்
Lakshmi Hebbalkar
ಲಕ್ಷ್ಮಿ ಹೆಬ್ಬಾಳ್ಕರ್
2020-ல் இலட்சுமி கெபால்கர்
சட்டமன்ற உறுப்பினர், கர்நாடக சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்சஞ்சய் பி. பாட்டீல்
தொகுதிபெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1975 (1975-05-28) (அகவை 48)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இரவீந்திர கெபால்கர்
பிள்ளைகள்மிர்னல் கெபால்கர்
கல்விமுதுகலை
As of சூன், 2021
மூலம்: [[1][2]]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இலட்சுமி இரவீந்திர கெபல்கரை மணந்து பெலகாவி அனுமான் நகரில் வசிக்கிறார். இவருக்கு மிர்னல் கெபல்கர் என்ற ஒரு மகன் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இலட்சுமி கெபால்கர் 2013-ல் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியிலும் பின்னர் 2014-ல் பெலகாவி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் மே 2015-ல் கருநாடக மாநில மகளிர் காங்கிரசு தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] 2018ஆம் ஆண்டில், இவர் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் சஞ்சய் பி. பாட்டீலை தோற்கடித்து கருநாடக மாநிலச் சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக 2019 செப்டம்பரில் அமலாக்க இயக்குநகரத்தால் இரண்டு நாட்கள் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.[6]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "BELGAUM RURAL Election Result 2018, Winner, BELGAUM RURAL MLA, Karnataka".
  2. "Belgaum Rural Assembly Election Result 2018: Belgaum Rural Candidates Lists, Winners and Votes". Archived from the original on 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  3. "Laxmi Hebbalkar is State women Congress chief". 12 May 2015.
  4. "Congress MLA Laxmi Hebbalkar shuts down quitting rumours". The New Indian Express. 15 July 2019. https://www.newindianexpress.com/states/karnataka/2019/jul/15/congress-mla-laxmi-hebbalkar-shuts-down-quitting-rumours-2003970.html. பார்த்த நாள்: 11 November 2019. 
  5. "Lakshmi R Hebbalkar(Bharatiya Janata party):Constituency- BELGAUM RURAL(BELGAUM) - Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  6. "Laxmi Hebbalkar quizzed for 2 days, maybe called again". 20 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_கெபால்கர்&oldid=3723596" இலிருந்து மீள்விக்கப்பட்டது