இலட்சுமி நாராயண் திரிபாதி
இலட்சுமி நாராயண் திரிபாதி (Laxmi Narayan Tripathi) (இலட்சுமி என்று அழைக்கப்படுகிறார்) ஒரு திருநங்கை / ஹிஜ்ரா உரிமை ஆர்வலரும், பாலிவுட் நடிகையும், பரதநாட்டிய நடனக் கலைஞர், நடன இயக்குனர் மற்றும் இந்தியாவின் மும்பையில் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆவார். கின்னார் அகதாவின் ஆச்சார்யா மகாமண்டலேசுவரரும் ஆவார்.[1][2] இவர் திசம்பர் 13, 1978 அன்று தானேவில் மால்டி பாய் மருத்துவமனையில் பிறந்தார். 2008ஆம் ஆண்டில் ஐ. நாவில் ஆசிய-பசிபிக் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் திருநங்கை ஆவார். அங்கு, பாலியல் சிறுபான்மையினரின் அவலநிலை குறித்து இவர் பேசினார். "மக்கள் மனிதர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களை மனிதர்களாக மதிக்க வேண்டும், எங்கள் உரிமைகளை மதித்து திருநங்கைகளாக கருத வேண்டும்," என்று கூறினார்.[3] இவர் 2011இல் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் போட்டியாளராக இருந்தார். இவரது முயற்சிகள் 2020ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்கு உதவியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ टाइम्स, नवभारत (2019-02-07). "किन्नर अखाड़े पर डाक टिकट जारी, दो महंत बने महामंडलेश्वर". नवभारत टाइम्स (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ "Kumbh Mela 2019: अब तक 13 अखाड़े कुंभ में होते थे शामिल, पहली बार किन्नर अखाड़े की एंट्री, जानें इनकी खासियत". hindi.timesnownews.com (in இந்தி). Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ Mehra, Preeti (2014-04-25). "A free country, again". http://www.thehindubusinessline.com/blink/meet/a-free-country-again/article5943957.ece.