இலண்டன் சாற்றுரை
இலண்டன் சாற்றுரை (London Declaration) 1949இல் பொதுநலவாய பிரதமர்களின் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியாட்சி அரசமைப்பை தழுவியபோதும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் தொடர்வது குறித்தான பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த சாற்றுரை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 28, 1949இல் இலண்டனில் வெளியிடப்பட்ட இந்த சாற்றுரை புதிய பொதுநலவாயத்திற்கு வித்திட்டது.[1][2] இந்தச் சாற்றுரையில் இரண்டு முதன்மையான முன்னொதுக்கங்கள் இருந்தன: இது மேலாட்சி அரசு முறைகளில் இல்லாத உறுப்பினர்களை சேர்க்கவும் தக்க வைக்கவும் வகை செய்தது; இதனால் குடியரசுகளையும் தனிப்பட்ட முடியாட்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது. மேலும் இம்மாற்றத்தை வெளிப்படுத்தும் வண்ணம் பிரித்தானிய காமன்வெல்த் என்றிருந்த பெயர் காமன்வெல்த் ஆஃப் நேசன்சு என மாற்றப்பட்டது.[3][4] இச்சாற்றுரை அரசர் ஆறாம் சார்ச்சை பொதுநலவாயத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டது. அவரது மறைவிற்குப் பின்னர் பொதுநலவாயத் தலைவர்கள் அரசி எலிசபெத் II இப்பொறுப்பை ஏற்க அங்கீகரித்தனர்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ de Smith, S.A. (July 1949). "The London Declaration of the Commonwealth Prime Ministers, April 28, 1949". The Modern Law Review 12 (3): 351–354. doi:10.1111/j.1468-2230.1949.tb00131.x.
- ↑ Marshall, Peter (April 1999). "Shaping the 'New Commonwealth', 1949". The Round Table 88 (350): 185–197. doi:10.1080/003585399108108.
- ↑ "The London Declaration" (PDF). The Commonwealth. 26 April 1949. Archived (PDF) from the original on 27 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ The Modern Commonwealth