இலதா நாராயணன்

இலதா நாராயணன் (Lata Narayanan)(பிறப்பு 1966) என்பவர் இந்திய-கனடா கணினி அறிவியலாளர் ஆவார். இவர் விநியோகிக்கப்பட்ட அல்காரிதம் மற்றும் சேணொலி தற்காலிக பிணையம் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் மொண்ட்ரியால், கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் துறையில் பேராசிரியர் ஆவார்.[1]

இளமையும் கல்வியும்

தொகு

நாராயணனின் பூர்வீகம் சென்னை ஆகும். இங்கு இவர் 1966-இல் பிறந்தார்.[2] இவர் புது தில்லியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். மேலும் 1987ஆம் ஆண்டு பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், பிலானியில் இளநிலை தொழில்நுட்ப பட்டத்தினை கணினி அறிவியலில் பெற்றார்.[2]

இதனைத் தொடர்ந்து கணினி அறிவியலில் முதுநிலை பட்டதாரி படிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள இரோசெச்டர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 1989-இல் முதுநிலைப் பட்டம் பெற்று 1992-இல் முனைவர் பட்டம் பெற்றார்.[3] மெஷ்-இணைக்கப்பட்ட செயலி வரிசை: தேர்வு, வரிசைப்படுத்துதல் மற்றும் ரூட்டிங் எனும் இவரது முனைவர் பட்ட ஆய்வினை டேனி கிரிசான்க்கால் ஆய்வு நெறியாளராக வழிநடத்தினார். [2]

தொழில்

தொகு

மனிடோபா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சிக்குப் பிறகு, நாராயணன் 1993-இல் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[3]

2012-இல் துறைத் தலைவராகத் தனது தற்போதைய பொறுப்பை ஏற்கும் முன், இவர் கான்கார்டியா பல்கலைக்கழக பொறியியல் மற்றும் கணினி அறிவியல் புலத்தில் கல்வித் திட்டங்களுக்கான இணை புலத் தலைவராக இருந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Lata Narayanan", Faculty, Concordia University, பார்க்கப்பட்ட நாள் 2023-02-20
  2. 2.0 2.1 2.2 Narayanan, Lata (1992), Selection, Sorting, and Routing on Mesh-Connected Processor Arrays, University of Rochester, hdl:1802/815
  3. 3.0 3.1 "Lata Narayanan", IEEE Xplore, IEEE, பார்க்கப்பட்ட நாள் 2023-02-20
  4. Tribute to Lata Narayanan, Concordia University Faculty of Engineering and Computer Science, June 4, 2012, பார்க்கப்பட்ட நாள் 2023-02-20
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதா_நாராயணன்&oldid=3884087" இலிருந்து மீள்விக்கப்பட்டது