இலதா ராசு
இலதா ராசு (Latha Raju) 1970 களில் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுவந்த ஒரு இந்திய திரைப்பட பாடகியும், நடிகையுமாவார்.[1] இவரது பிரபலமான மலையாளப் பாடல்களில் சேதுபந்தனம் என்ற படத்தில் இடம்பெற்ற "பிஞ்சு ஹிருதயம் தேவலாயம்", "மஞ்சக்கிளி ஸ்வர்ணக்கிளி மயில்பீலிக்காட்டிலே வர்ணக்கிளி", "இவிடுதே சேச்சிகின்னாலே" (அசாகுல்லா சலீனா) போன்ற பாடல்களாகும். இவர் தமிழ், கன்னடம், துளு போன்ற மொழிகளிலும் பாடல்களை வழங்கியுள்ளார். பிரபல நடிகைகளான சுஹாசினி, சோபனா, மறைந்த ஷோபா போன்ற பல முன்னணி நடிகைகளுக்காக மலையாளத்தில் சில படங்களில் பின்னணி குரல் வழங்கியுள்ளார்.[2] வாழ்நாள் சாதனைக்காக 2003இல் கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதை வென்றுள்ளார். மலையாள மெல்லிசைக்கு பங்களித்ததற்காக கேரள சங்கீத நாடக அகாடமி இவருக்கு விருது வழங்கியது. மலையாளத் திரைப்பட இசையில் சிறந்து விளங்கியதற்காக 2019ஆம் ஆண்டில் கேரள அரசு இவரை கௌரவித்தது.
இலதா ராசு | |
---|---|
பிறப்பு | திருச்சூர், கேரளம், இந்தியா |
இறப்பு | குரல் இசை |
இசை வடிவங்கள் | பின்னணி பாடுதல், நடிப்பு, பின்னணிக் குரல் |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1962–1999 |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஆடியோடிராக்ஸ் |
அனைத்திந்திய வானொலி / தூர்தர்ஷன் போன்ற நிறுவனங்களில் 34 ஆண்டுகளாக பல்வேறு திறன்களில் பணியாற்றினார். சென்னை, திருவனந்தபுரம் ஆகிய நிலையங்களின் நிலைய இயக்குநராக பல ஆண்டுகளாக இருந்தார். மேலும், சந்தைப்படுத்தல் இயக்குநராக பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1951 சூன் 25 அன்று பிறந்த இவர், பாடகர் சாந்தா பி. நாயர், திரைப்பட இயக்குனரும், மலையாளத் திரைப்படங்களில் திரைக்கதை எழுத்தாளருமான கை. பத்மநாபன் நாயர் ஆகியோரின் ஒரே மகளாவார். இவரது முதல் பாடல் 1962ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான சினேகதீபம் படத்தில் இருந்தது. இவர் முதுகலை பட்டம் பெற்றார். 2011ஆம் ஆண்டில் சென்னை தூர்தர்ஷன், அனைத்திந்திய வானொலியில் சந்தைப்படுத்தல் இயக்குநராக ஓய்வு பெற்ற இவர், 2016 வரை ஆலோசகராக அதே பதவியில் தொடர்ந்தார். இவரது கணவர், ஜே. எம். இராசுவும், ஒரு பின்னணி பாடகர். இவர், இசைத் தொகுப்புகளைத் தயாரிக்கிறார். இந்த தம்பதியருக்கு ஆலாப் இராசு, அனுபமா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[3] இவரது மகன் ஒரு இசைக்கலைஞராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.malayalachalachithram.com/profiles.php?i=770
- ↑ http://www.deccanherald.com/content/365192/veteran-playback-singer-latha-raju.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)