இலத்திகா துக்ரால்
இலத்திகா துக்ரால் (Latika Thukral) (பிறப்பு 1967) இந்தியாவைச் சேர்ந்த வங்கியாளராவார். இவர் தனது நகரத்தின் வடிவத்தை மாற்றியமைத்தார். குறிப்பாக குருகிராமிலுள்ள ஆரவல்லி பல்லுயிர் பூங்காவில் பணி புரிந்தார் . #IAmGurgaon என்ற பிரசாரத்தின் மூலம் மில்லியன் கணக்கில் மரங்கள் நடப்பட்டன. இவருக்கு 2015ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது.
இலத்திகா துக்ரால் | |
---|---|
2015இல் இலத்திகா துக்ரால் | |
பிறப்பு | 1967 |
தேசியம் | இந்தியா |
கல்வி | தில்லி பல்கலைக்கழகம் |
பணி | வங்கியாளர், சமூக ஆர்வலர் |
பணியகம் | சிட்டிவங்கி |
அறியப்படுவது | '#IamGurgaon என்ற பிரசாரத்திற்காக நாரி சக்தி விருது பெற்றவர் |
வாழ்க்கைத் துணை | இருக்கிறார் |
பிள்ளைகள் | இரண்டு |
வாழ்க்கை
தொகுதுக்ரால் 1967களில் பிறந்தார் [1] அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் பட்டம் பெற்றார். ஐ.டி.சி விடுதிகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சிட்டிவங்கியில் 18 வருடங்கள் பணிபுரிந்தார். அங்கு இவர் ஒரு மூத்த துணைத் தலைவராக உயர்ந்தார்.
மரம் நடுதல்
தொகுகுருகிராம் நகரம் பற்றி அறிந்து இவர் அதைப் பற்றிய கவலை கொள்ள ஆரம்பித்தார். 1996இல் இவர் அந்த நகரத்திற்கு சென்ற போது அந்தச் சிறிய நகரம் வளர்ந்து வந்தது. ஆனால் அது வடிவமைப்போ அல்லது திட்டமிடல் இல்லாமல் வளர்ந்தது. [2] இவர் ஒரு நடுத்தர வர்க்கக் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். ஆனால் ஒரு பூங்கா தொடர்ந்து இவரது கவனத்தை ஈர்த்தது. இவர் 1999இல் #IamGurgaon என்ற பிரச்சாரத்தை நிறுவி, [3] மற்ற தன்னார்வலர்களை ஈர்த்தார். இவர்கள் தங்கள் நகரத்தில் ஒரு மில்லியன் பூர்வீக மரங்களை நடவு செய்ய முடிவு செய்தனர். [4]
விருதுகள்
தொகு2010ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அரியானா அரசு இவரைப் பாராட்டி விருது வழங்கியது. #IamGurgaon உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அவற்றின் திட்டங்கள் பெருநகர நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றது. [5]
2015 இல் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [6] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். [7]
கொரோனா காலம்
தொகு2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரசு பரவியபோது, #IamGurgaon நகரின் வறிய குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்கும் பணியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது. சில பகுதிகளுக்கு அருகிலுள்ள சமுதாயக் கூடங்கள் இவர்களுக்கு உதவின. ஏப்ரல் மாதத்தில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இவர்கள் திட்டமிட்டனர். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 3,250 ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. மேலும் பதினைந்து முதல் இருபதாயிரம் குடும்பங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "She's every woman..." India Today (in ஆங்கிலம்). March 7, 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Latika Thukral". BD Foundation | Beyond Diversity (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "She's every woman..." India Today (in ஆங்கிலம்). March 7, 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18."She's every woman..." India Today. March 7, 2013. Retrieved 2020-04-18.
- ↑ "Turning the city green, a million trees at a time". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Latika Thukral". Adventure Nation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively". India Today (in ஆங்கிலம்). March 9, 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
- ↑ "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Gurugram civic body identifies 250 clusters for supply of essentials". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-04-05. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.