இலந்தனம்(III) தெலூரைடு
இலந்தனம்(III) தெலூரைடு (Lanthanum(III) telluride) என்பது La2Te3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், மற்றும் தெலூரியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இலந்தனம் தனிமத்தின் அறியப்பட்ட தெலூரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
12031-53-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
La2Te3 | |
வாய்ப்பாட்டு எடை | 660.61 g·mol−1 |
தோற்றம் | சாம்பல் நிற திண்மம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇலந்தன்ம், தெலூரியம், சோடியம் கார்பனேட்டு ஆகியவற்றின் கலவையை 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து இலந்தனம்(III) தெலூரைடு உருவாகும்.[1] இலந்தனம்(III) குளோரைடு மற்றும் தெலூரியத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்தியும் இலந்தனம்(III) தெலூரைடு தயாரிக்க முடியும். இவ்வினையில், தெலூரியம் முதலில் +4 ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் ஐதரசீன் நீரேற்று −2 ஆக்சிசனேற்ற நிலைக்கு குறைக்கப்படுகிறது.[2] La2Te3-Cu2Te அமைப்பில் CuLaTe2 மற்றும் Cu4La2Te5 போன்ற பல்வேறு கட்டங்களும் உருவாக்கப்படலாம்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 E. Montignie (Nov 1968). "Über einige Telluride: MoTe2, La2Te3 und V3Te" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 362 (5–6): 329–330. doi:10.1002/zaac.19683620514. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19683620514. பார்த்த நாள்: 2022-03-28.
- ↑ G.D. Bagde, S.D. Sartale, C.D. Lokhande (Feb 2005). "Spray pyrolysis deposition of lanthanum telluride thin films and their characterizations" (in en). Materials Chemistry and Physics 89 (2–3): 402–405. doi:10.1016/j.matchemphys.2004.09.022. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0254058404004742. பார்த்த நாள்: 2022-03-28.
- ↑ Pardo, Marie P.; Flahaut, Jean. L2Te3-Cu2Te(L=lanthanum to samarium) systems. Bulletin de la Societe Chimique de France, 1971. 10: 3411-3414. பன்னாட்டுத் தர தொடர் எண் 0037-8968.