இலந்தனம் மாங்கனைட்டு

இலந்தனம் மாங்கனைட்டு (Lanthanum manganite) என்பது LaMnO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் எல்.எம்.ஒ. என்ற சுருக்கப் பெயரால் இதை அழைப்பார்கள். மாங்கனீசு அணுவை நடுவிலும் எண்முக மையங்களில் ஆக்சிசனும் கொண்ட பெரோவ்சிகைட் கட்டமைப்பில் இலந்தனம் மாங்கனைட்டு உருவாகிறது. எண்முக ஆக்சிசனின் யாகன்-தெல்லெர் உருமாற்றம் காரணமாக கனசதுர பெரோவ்சிகைட் கட்டமைப்பானது ஒரு செஞ்சாய்சதுர அமைப்பாக உருமாற்றமடைகிறது[1].

இலந்தனம் மாங்கனைட்டு
பண்புகள்
LaMnO3
வாய்ப்பாட்டு எடை 241.84 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலந்தனம் மாங்கனைட்டு கலப்புலோகங்கள் தொகு

இலந்தனம் மாங்கனைட்டு ஒரு மின்காப்பான் மற்றும் ஏ-வகை எதிர் அயக்காந்தம் ஆகும். மிகமுக்கியமான பல கலப்புலோகங்களுக்கு இச்சேர்மம் ஒரு மூலச்சேர்மமாக இருக்கிறது. இவை பெரும்பாலும் அருமண் மாங்கனைட்டுகள் அல்லது கொலொசல் காந்தத்தடை ஆக்சைடுகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இலந்தனம் இசுட்ரோன்சியம் மாங்கனைட்டு, இலந்தனம் கால்சியம் மாங்கனைட்டு மற்றும் போன்றவை சில இவ்வகைச் சேர்மவகையில் உள்ளடங்கும்.

இலந்தனம் மாங்கனைட்டில் இலந்தனம் மற்றும் மாங்கனீசு இரண்டும் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலை எண்ணைக் கொண்டுள்ளன. இசுட்ரோன்சியம் அல்லது கால்சியம் போன்ற இணைதிறன் இரண்டு கொண்ட தனிமங்களை இலந்தனத்திற்குப் பதிலாகப் பதிலீடு செய்யும் பொழுது நான்கு இணைதிறன் கொண்ட அதே எண்ணிக்கையிலான Mn+4 அணுக்களாகத் தூண்டப்படுகின்றன. இத்தகைய பதிலீடு அல்லது கலப்பு பல்வேறு வகையான மின்னணு விளைவுகளைத் தூண்டுகின்றன. இவையே மிகுந்த மற்றும் சிக்கலான எலக்ட்ரான் இயைபுப்படுதல் நிகழ்வுக்கான அடிப்படைகளாகும். வெவ்வேறான மின்னணுநிலை தோற்றங்களை இவ்வமைப்புகள் அளிக்கின்றன[2].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_மாங்கனைட்டு&oldid=2482155" இலிருந்து மீள்விக்கப்பட்டது