இலாரந்து நோட்டேல்

 

இலாரந்து நோட்டேல்

பிறப்பு 29 சூலை 1952 (1952-07-29) (அகவை 72)
அறியப்பட்டதுஈர்ப்பு வில்லை, சார்பியல் அளவுகோல் கோட்பாடு

இலாரந்து நோட்டேல் (Laurent Nottale)(பிறப்பு: ஜூலை 29,1952) ஒரு வானியற்பியலாளரும் சி. என். ஆர். எஸ். இன் ஓய்வு பெற்ற ஆராய்ச்சி இயக்குநரும் , பாரிசு ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளரும் ஆவார். குவைய இயற்பியல், சார்பியல் கோட்பாட்டை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட சார்பியல் அளவுகோல் கோட்பாட்டின் ஆசிரியரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

அறிவியல் தொழில்

தொகு

நோட்டேல் பொது சார்பியல் களத்தில் தனது தொழில்முறை பணியைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை " பால்வெளிக் கொத்துகளால் அபுள் சார்பின் சிற்றுலைவு " என்ற தலைப்பில் பெற்றார் , அதில்ஈவர் பால்வெளிக்கொத்துகள் ஒட்டுமொத்தமாக நெடுந்தொலைவு வாயில்களில் ஈர்ப்பு வில்லைகளாக செயல்படக்கூடும் என்பதைக் காட்டினார்.[1] இந்த முடிவுகளில் சில நேச்சர் இதழில் வெளியிடப்பட்டன.[2][3]

இவர் L ' Univers et la Lumière éflammarion énouvelle Bibliothèque Scientifique 1994ʼ Champs 1998) என்ற பெயர்பெற்ற புத்தகத்தை வெளியிட்டு, இதற்காக இவர் (Prix du livre d'ÂAstronomie Haute - Maurienne - Vanoise) எனும் பரிசைப் பெற்றார்.

வின்சென்ட் போந்தெம்சும் யுவெசு கிங்கிராசும் கூற்றுப்படி , நோட்டேலின் அறிவியல் வாழ்க்கையில் இரண்டு தனித்தன்மைக் கட்டங்கள் உள்ளன எனக் கூறுகின்றனர்தன்படி, 1975 முதல் 1991 வரையில் உள்ள காலத்தில் இவர் ஈர்ப்பு வில்லைகள் போன்ற வழக்கமான தலைப்புகளில் ஆய்வு செய்தார். அதே நேரத்தில் 1984 முதல் இவர் தனது சார்பியல் அளவுகோல் கோட்பாட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார் - இது முறிநிலை காலவெளி அடிப்படையிலான இயற்பியல் கோட்பாட்டிற்கான முன்மொழிவு ஆகும்.

நோட்டேலின் சார்பியல் அளவுகோல் கோட்பாடு

தொகு

சார்பியல் அளவுகோல் கோட்பாடு என்பது சார்பியலை இயற்பியல் அளவுகளுக்கு (நேர, நீள, ஆற்றல், அல்லது உந்தத்தின்) நீட்டிக்கக் கூறுகிறது.[4] இருண்ட பொருள் நிலவல், கோள் அமைப்புகளின் உருவாக்கம்,, உயிரியல், புவியியல், தொழில்நுட்ப ஒருமைகள் ஆகியவற்றிற்கான பயன்பாடுகள் உட்பட , இதன் சார்பாக ஆதரவாளர்கள் பரந்த அளவிலான பல கூற்றுக்களை முன்வைத்துள்ளனர்.[5][6] நோட்டேல் தானே தொழில்நுட்ப ஒருமைகளைப் படிக்கவில்லை. இந்த முன்மொழிவு அறிவியல் சமூகத்தால் பரவலான வரவேற்பைப் பெறவில்லை.[7]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

தொகு

மேலும் காண்க

தொகு
  • முறிநிலை அண்டவியல்

மேற்கோள்கள்

தொகு
  1. in French: "Les lentilles gravitationnelles par amas de galaxies"
  2. Karoji, H.; Nottale, L. (1976). "Possible implications of the Rubin-Ford effect". Nature 259 (5538): 31–33. doi:10.1038/259031a0. Bibcode: 1976Natur.259...31K. 
  3. Nottale, L.; Vigier, J. P. (1977). "Continuous increase of Hubble modulus behind clusters of galaxies". Nature 268 (5621): 608–610. doi:10.1038/268608a0. Bibcode: 1977Natur.268..608N. 
  4. Nottale, L. (1989). "Fractals and the Quantum Theory of Spacetime". International Journal of Modern Physics A 04 (19): 5047–5117. doi:10.1142/S0217751X89002156. Bibcode: 1989IJMPA...4.5047N. 
  5. Nottale, L. (2008-12-19). Scale Relativity and Fractal Space-Time: A New Approach to Unifying Relativity and Quantum Mechanics. Bibcode:2011srfs.book.....N.
  6. Magee, Christopher L.; Devezas, Tessaleno C. (2011). "How many singularities are near and how will they disrupt human history?". Technological Forecasting and Social Change 78 (8): 1365–78. doi:10.1016/j.techfore.2011.07.013. http://web.mit.edu/cmagee/www/documents/29-singularitysdarticle.pdf. 
  7. Peter, Patrick (2013). "Laurent Nottale: Scale relativity and fractal space-time". General Relativity and Gravitation 45 (7): 1459–61. doi:10.1007/s10714-013-1535-8. Bibcode: 2013GReGr..45.1459P. https://hal.archives-ouvertes.fr/hal-03645526/file/Peter2013.pdf. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாரந்து_நோட்டேல்&oldid=3957562" இலிருந்து மீள்விக்கப்பட்டது