இலாரோயில் குளோரைடு

வேதிச் சேர்மம்

இலாரோயில் குளோரைடு (Lauroyl chloride) CH3(CH2)10COCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இலாரிக் அமிலத்தின் அமில குளோரைடு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. வேதிச் பொருள்களில் இலாரோயில் குழுவை சேர்ப்பதற்கு உதவும் ஒரு தரமான வினையாக்கியாக இலாரோயில் குளோரைடு பயன்படுகிறது.[1] முக்கியமாக இருலாரோயில் பெராக்சைடுக்கு முன்னோடிச் சேர்மமாக இலாரோயில் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இயங்கு உறுப்பு பலபடியாக்கல் வினைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

இலாரோயில் குளோரைடு
இனங்காட்டிகள்
112-16-3
பண்புகள்
C12H23ClO
வாய்ப்பாட்டு எடை 218.77 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.93 கி/செ.மீ3
உருகுநிலை −17 °C (1 °F; 256 K)
கொதிநிலை 145 °C (293 °F; 418 K) 18 டார்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அமில குளோரைடுகளின் பல்வேறு குணாதிசய வினைகளுக்கு இலாரோயில் குளோரைடு ஓர் அடி மூலக்கூறு ஆகும். காரத்துடன் வினைபுரிந்து இது [CH3(CH2)10]2CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இலாரோனாக மாறுகிறது. இலாரோன் என்பது ஒரு கீட்டோன் ஆகும்.[3] சோடியம் அசைடுடன் வினையில் ஈடுபட்டு அசைல் அசைடு கர்டியசு மறுசீரமைப்பு வினையின் மூலம் அண்டெசைல் ஐசோசயனேட்டைக் கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Peng, Feng; Ren, Jun-Li; Peng, Bai; Xu, Feng; Sun, Run-Cang; Sun, Jin-Xia (2008). "Rapid homogeneous lauroylation of wheat straw hemicelluloses under mild conditions". Carbohydrate Research 343 (17): 2956–2962. doi:10.1016/j.carres.2008.08.023. பப்மெட்:18793765. 
  2. Uhl, Agnes; Bitzer, Mario; Wolf, Hanno; Hermann, Dominik; Gutewort, Sven; Völkl, Matthias; Nagl, Iris (2005), "Peroxy Compounds, Organic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, pp. 1–45, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_199.pub2
  3. J. C. Sauer (1951). "Laurone". Organic Syntheses 31: 68. doi:10.15227/orgsyn.031.0068. 
  4. Allen, C. F. H.; Bell, Alan (1944). "Undecyl Isocyanate". Organic Syntheses 24: 94. doi:10.15227/orgsyn.024.0094. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாரோயில்_குளோரைடு&oldid=3734969" இலிருந்து மீள்விக்கப்பட்டது