இலிசா ஆர்வே சுமித்

இலிசா ஆர்வே சுமித் (Lisa Harvey-Smith) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் சிட்னியில் உள்ள CSIRO இல் பணிபுரிகிறார் இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் சகிஅ அணியின் உருவாக்கமும் படிமலர்ச்சி, அண்டக் காந்தவியல், விண்மீன் பெருவெடிப்பு எச்சங்கள், உடுக்கணவெளி ஊடகம், உயரெடை விண்மீன் உருவாக்கமும் வானியற்பியல் நுண்ணலைக் கதிர்கள், ஆகியவற்றில் அமைந்துள்ளது.[1] ஆர்வே சுமித் ஆத்திரேலியத் தேசியத் தொலைநோக்கி ஏந்து அறிவியல் திட்டத்தின் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் ஆவார். இவர் முன்பு ஆத்திரேலிய சகீ அணியின் தடங்காண் தொலைநோக்கி திட்ட அறிவியலாளராக இருந்தார். அப்போது தொடக்கநிலை அறிவியல் திட்டத்துக்குத் தலைமை தாங்கி சகிமீ அணியின் தடங்காண் தொலைநோக்கி திட்டத்தை உருவாக்கினார்.[2] இத்திட்டம் 2015 இல் தொடங்கியது. இவர் ஆத்திரேலிய ஒலிபரப்புக் குழுமத்தின் நேரடி விண்மீன் நோக்கல் எனும் தொலைநோக்கித் தொடரின் விளக்குநராகவும் அதன் தொடர்புடைய திட்டமாகிய [http://www.abc.net.au/tv/programs/stargazing-live-back-to-earth/ நேரடி விண்மீன் நோக்கல்: புவிக்குத் திரும்புதல் 2016 இன் விளக்குநராகவும் இருந்தார். அதே ஆன்டில், பிரித்தானிய ஒலிபரப்புக் குழுமத்தின் தொடராகிய நேரடி விண்மீன் நோக்கல், ஆத்திரேலிய ஒலிபரப்புக் குழுமத்தின் தொடர்ப்பகுதி 6 (மிதப்பு), [http://www.abc.net.au/tv/programs/todd-sampsons-life-on-the-line/ நேரடி தோடு சேம்சன் வாழ்க்கை ஆகியவற்றிலும் பங்கேற்றார். இவர் 2016 ஆகத்து 30 இல் ஆத்திரேலியத் தொழிலகம், புத்தாக்கம், அறிவியல் யுரேகா பரிசினைப் பெற்றார். இப்பரிசு இவருக்கு ஆத்திரேலிய அறிவியல் ஆராய்ச்சி பற்ரிய புரிதலை வென்றெடுத்ததற்காக வழங்கப்பட்டது.[3] இவர் 2015 ஆம் ஆண்டின் இறுதிபடுத்துனர்கள்-யுரேகா, யுரேகா பரிசு இறுதிபடுத்துன்ரக இருந்தார். இவரை 2012 நவம்பரில் சிட்னி மார்னிங் எரால்டு இதழ் "சிட்னியின் அரிய நூறு தாக்கம் செலுத்தியவர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது".[4]

இலிசா ஆர்வே சுமித்
Lisa Harvey-Smith
பிறப்பு1979
ஆர்லோ, எசக்சு, இங்கிலாந்து
வாழிடம்சிட்னி, ஆத்திரேலியா
குடியுரிமைபிரித்தானியர், ஆத்திரேலியர்
துறைஇயற்பியலாளர், வானியற்பியலாளர்
பணியிடங்கள்CSIRO, வான்வெளி அறிவியல்; சிட்னி பலகலைக்கழகம்; ஐரோப்பாவில் உள்ள மீப்பெரு அடித்தளக் குறுக்கீட்டளவி கூட்டு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்யோடிரல் கரை வான்காணகம், மான்செசுட்டர் பல்கலைக்கழகம், நியுகேசில் பல்;கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்முனைவர் ஜிம் கோகன்
அறியப்படுவதுவானியலாளர், தொலைக்காட்சி விளக்குநர், MC, சொற்பொழிவாளர், எழுத்தாளர் CSIRO சகிஅ (SKA) 2009-2012 திட்ட அறிவியலாளர்; CSIRO ASKAP 2012-2017 திட்ட அறிவியலாளர்; CSIRO ஆய்வுக் குழுத் தலைவர், (2017 இல் இருந்து)
விருதுகள்வெற்றியாளர், ஆத்திரேலிய அறிவியல் ஆராய்ச்சி மக்கள் பரப்புரைக்கான ஆத்திரேலிய அருங்காட்சியக யுரேகா பரிசு (2016), வெற்றியாளர், CSIRO தலைவர் பதக்கம் 2015 (ASKAP குழு)

இறுதிப் பட்டியலாளர், ஆத்திரேலிய அறிவியல் ஆராய்ச்சி மக்கள் பரப்புரைக்கான ஆத்திரேலிய அருங்காட்சியக யுரேகா பரிசு (2015)

சிட்னி காலை எரால்டு இதழின் அரிய 100 பேரில் ஒருவர்: பெருந்தாக்கம் செலுத்தியவர்(2012)
இலிசாஆர்வே சுமித், 2014. மெக்கார்த்தர் வானியல் பேரவை

கல்வி தொகு

ஆர்வே சுமித் தன் தாயார் தலைமையாசிரியராக இருந்த பிஞ்சிங்பீல்டு தொடக்கநிலைப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் 1991 முதல் 1996 வரை வீட்டிலேயே கலவி பயின்றுள்ளார். இக்காலகட்டத்தில் முறையான கல்வியைக் கற்கவிலஐ. ஆனால் அவருக்கு ஆர்வம் ஊட்டியதை எல்லாம் பயின்றுள்ளார். இவர் பிரெய்ன்ட்ரீ கல்லூரியில் சேர்ந்து உயர்நிலை கணிதவியல், இயற்பியல், வேதியியல், பொது அறிவுக் கலவியைப் பயின்றார். இவர் 1998 ஆம் ஆண்டின் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார். இவர்2002 இல் இயற்பியலில் முதுவர் பட்டத்தை நியுகேசில் அப்பன்டைன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் மான்சுசுட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யோடிரல் கரை வான்காணகத்தில் முனைவர் பட்டத்தை 2005 இல் கதிர்வானியலில் பெற்றார். இவர் 2004 இல் இளவல் பட்டப்படிப்பு படிக்கும்போது, மெக்சு பிளாங்கு கதிர்வானியல் நிறுவனத்தில் கோடைப்பருவ ஆராய்ச்சி மாணவராக இருந்துள்ளார். இவரது ஆராய்ச்சி அலை உருமாற்றம் வழி படிமக் கட்டமைப்புக் குலைத்தல் என்பதாகும். அந்த ஆண்டில் இவர் யோடிரல் கரை வான்காணகம் சார்ந்த பிரித்தானிய ஒலிபரப்புக் குழுமத் தொலைக்காட்சி வினாக் குழு உறுப்பினராக இருந்து மிகக் குறுகிய இடைவெளியில் பிரித்தானிய நூலகத்தை தோற்கடித்துள்ளார்.

வானியலில் மகளிர் தொகு

இவர் 2012 முதல் 2015 வரை ஆத்திரேலிய வானியல் கழகத்தின் வானியலில் மகளிர் முடுக்கக் குழுவில் தலைமை வகித்துள்ளார்.[5] During that time she presided over the launch of a new national gender equity scheme for astronomers in Australia called The Pleiades Awards.[6]. 2017 மே மாதத்தில் [1]'s Superstars of STEM முன்முயற்சியின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.

விளையாட்டு தொகு

இவர் மீநீள ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்துகொள்ளும் தடகள விளையாட்டு வீராங்கனை ஆவார்.[7]

தொடர்புள்ள பட்டியல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Lisa Harvey-Smith on The Conversation". Theconversation.edu.au. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
  2. "ASKAP Early Science". ATNF. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.
  3. https://scontent.fmel2-1.fna.fbcdn.net/v/t1.0-9/14141984_10157571308335647_6523196334090493968_n.jpg?oh=440ddd4bf7130026e5a36afeea094532&oe=5847F5D1
  4. "the(sydney) magazine's Top 100 Most Influential People". The Sydney Morning Herald. http://www.smh.com.au/lifestyle/top-100-the-thinkers-20121126-2a37o.html. 
  5. "Steering Committee | Women in Astronomy". Asawomeninastronomy.org. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
  6. "The Pleiades Awards;". Asawomeninastronomy.org. பார்க்கப்பட்ட நாள் 2015-03-07.
  7. "Ultra-Marathon". Lisaharveysmith.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசா_ஆர்வே_சுமித்&oldid=3234931" இலிருந்து மீள்விக்கப்பட்டது