இலித்தியம் பொலோனைடு

இலித்தியம் பொலோனைடு (Lithium polonide) என்பது Li2Po என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். பொலோனியச் சேர்மங்களில் அதிக வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்டது பொலோனைடு ஆகும்.[2][3]

இலித்தியம் பொலோனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் பொலோனைடு
பண்புகள்
Li2Po
வாய்ப்பாட்டு எடை 222.86 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிறம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஐதரோபொலோனிக் அமிலம் என்றழைக்கப்படும் நீர் கலந்த ஐதரசன் பொலோனைடு இலித்திய உலோகத்துடன் ஒடுக்க வினை புரிந்து இலித்தியம் பொலோனைடு உருவாகிறது. ஐதரசன் பொலோனைடு, இலித்தியம் பகுதிப்பொருளாக உள்ள காரங்களுடன் அமில-கார வகை வினை புரிந்தும் இலித்தியம் பொலோனைடு தயாரிக்கப்படுகின்றது.

H2Po + 2 Li → Li2Po + H2

இலித்தியம், பொலோனியம் இரண்டையும் சேர்த்து 300 முதல் 400 °செ. வெப்பநிலைக்குச் சூடுபடுத்தியும் இலித்தியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.

வடிவமைப்பு

தொகு

சோடியம் பொலோனைடு போலவே இலித்தியம் பொலோனைட்டுச் சேர்மமும் புளோரைட்டுக் கனிமத்தின் அமைப்புக்கு எதிரான படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. pp. 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120236046. பார்க்கப்பட்ட நாள் சூன் 17, 2012.
  2. 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 899. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. 3.0 3.1 Moyer, Harvey V. (1956), "Chemical Properties of Polonium", in Moyer, Harvey V. (ed.), Polonium, Oak Ridge, Tenn.: United States Atomic Energy Commission, pp. 33–96, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2172/4367751, TID-5221.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_பொலோனைடு&oldid=2052691" இலிருந்து மீள்விக்கப்பட்டது